Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மருத்துவ பயன்கள் கொண்ட முடக்கத்தான் கீரை.... எதற்கெல்லாம் பயன்படுகிறது?

மருத்துவ பயன்கள் கொண்ட முடக்கத்தான் கீரை…. எதற்கெல்லாம் பயன்படுகிறது?

-

- Advertisement -

நம் முன்னோர்கள் காலத்தில் மூலிகை வகைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அதாவது ஏதேனும் நோய் இருந்தால் அதற்கென சில மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதில் ஒன்றுதான் முடக்கத்தான் கீரை. மருத்துவ பயன்கள் கொண்ட முடக்கத்தான் கீரை.... எதற்கெல்லாம் பயன்படுகிறது?இதனை முடக்கறுத்தான் கீரை என்றும் சொல்வர். இந்த முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு தரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதையும் விட பல்வேறு நோய்களுக்கு இந்த முடக்கறுத்தான் கீரை மருந்தாகப் பயன்படுகிறது. குறிப்பாக மலச்சிக்கல், மூல நோய், வாதம் போன்றவைகளுக்கு இந்த முடக்கத்தான் கீரை நிவாரணம் தருகிறது. மேலும் இது ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும் GOUT நோய்க்கும் தீர்வு தருகிறது என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மருத்துவ பயன்கள் கொண்ட முடக்கத்தான் கீரை.... எதற்கெல்லாம் பயன்படுகிறது?

காது வலி ஏற்படும் சமயங்களில் கூட இந்த முடக்கத்தான் கீரை யின் சாறை எடுத்து அதில் சில துணிகளை காதுகளுக்குள் விட காது வலி தீரும். பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் இந்த முடக்கத்தான் கீரை தீர்வு தரும். முடக்கத்தான் கீரை இலைகளில் குவர்செடின், அபிஜெனின், காலிகோசின் போன்ற வேதிப்பொருட்கள் இருப்பதால் இதனை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதனை பருகிவர உடனடியாக உடலுக்கு சுறுசுறுப்பு கிடைக்கும்.

எனவே இந்த முடக்கத்தான் கீரையை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு நல்லது. மருத்துவ பயன்கள் கொண்ட முடக்கத்தான் கீரை.... எதற்கெல்லாம் பயன்படுகிறது?அதே சமயம் மற்ற கீரைகளை சமைப்பது போன்று இந்த முடக்கத்தான் கீரையையும் சமைத்து சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் இந்த கீரையை அரைத்து தோசை மாவில் சேர்த்து தோசை செய்து சாப்பிடலாம். இருப்பினும் உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் இந்த முடக்கத்தான் கீரையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிட்டாலும் சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு அதன் பின்னர் இந்தக் கீரையை சாப்பிடுவது சிறந்தது.

MUST READ