Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இளநரைக்கு சரியான தீர்வு!

இளநரைக்கு சரியான தீர்வு!

-

இன்றைய காலகட்டத்தில் பல இளம் வயதினருக்கு இளநரை தவிர்க்க முடியாத பிரச்சனையாக மாறி வருகிறது. மாறிவரும் காலநிலை, உணவு பழக்கங்கள், மன அழுத்தம், பித்தம் போன்ற பல காரணங்களால் இளம் வயதிலேயே நரை முடி உருவாகிறது. இதை தடுக்கும் சில வழிமுறைகள் பின் வருமாறு.இளநரைக்கு சரியான தீர்வு!

சின்ன வெங்காயத்தின் சாறு, செம்பருத்தி இலையின் சாறு அல்லது நெல்லிக்காயை அரைத்து அதன் சாற்றை எடுத்து குளிப்பதற்கு முன் தலையில் தேய்த்து பத்து நிமிடங்களுக்கு பின் குளித்து வந்தால் இளநரை போகும்.

நாம் தினமும் உணவில் பயன்படுத்தும் கருவேப்பிலை இளநரையை நீக்கும் சக்தி படைத்தது. தினமும் உணவுடன் தவிர்க்காமல் கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ளலாம்.

நெல்லிக்காயை தினசரி உண்டு வர அதிலுள்ள வைட்டமின் சி முழுமையாக கிடைப்பதுடன் இளநரை பிரச்சினைக்கும் இது தீர்வாக அமையும்.இளநரைக்கு சரியான தீர்வு!

காற்று மாசு அல்லது தூசு நிறைந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் அல்லது தலையில் தூசிகள் படாமல் பாதுகாப்பாக வைப்பதன் மூலமும் இளநரையை தவிர்க்கலாம்.

வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்து காய்ச்சி ஆறவைத்து தலைக்கு தேய்த்து வர நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

நாள்தோறும் தலைக்கு தேங்காய் எண்ணெயை தேய்த்து வர உடல் உஷ்ணத்தை குறைப்பதோடு முடியும் ஆரோக்கியமாக வளரும்.இளநரைக்கு சரியான தீர்வு!

இரும்புச்சத்து அதிகம் கொண்ட கீரைகள், பேரிச்சம்பழம், நெல்லிக்காய் எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதாலும் இளநரை உண்டாவதை தவிர்க்கலாம்.

இருப்பினும் இம்முறைகளை ஒருமுறை பின்பற்றி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

MUST READ