Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கருமையான உதடு சிவப்பாக மாற சில டிப்ஸ்!

கருமையான உதடு சிவப்பாக மாற சில டிப்ஸ்!

-

ஆண்களுக்கு புகை பிடித்தல் போன்ற பல காரணங்களால் உதடுகள் கருமையாக தோற்றமளிக்கும். ஆனால் பெண்கள் சிலருக்கும் எத்தகைய மோசமான பழக்கங்களுமே இல்லாமல் வெயிலினால் கூட உதடுகள் கருப்பாக மாறிவிடுகின்றன.கருமையான உதடு சிவப்பாக மாற சில டிப்ஸ்! ஆகையினால் பெண்கள் பலரும் தங்களின் உதடுகள் சிவப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது பொதுவானது தான். ஆனால் அதற்காக அவர்கள் மார்க்கெட்டில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி உபயோகிப்பது பிற்காலத்தில் பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே வீட்டிலேயே ஈஸியான முறையில் கருமையான உதடுகளை சிவப்பாக மாற்ற முடியும். தற்போது அதற்கான சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

முதலில் தேங்காய் எண்ணெய் என்பது வறண்ட சருமத்திற்கு தீர்வளிக்கும். அது போல தான் இந்த தேங்காய் எண்ணெயானது கருமையான உதடுகளை சிவப்பாக மாற்றவும் உதவுகிறது.கருமையான உதடு சிவப்பாக மாற சில டிப்ஸ்! எனவே இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக ஒரு சொட்டு தேங்காய் எண்ணெயை உதடுகளில் அப்ளை செய்வது விரைவில் நல்ல ரிசல்ட்டை தரும்.

அடுத்தது தேன் என்பது அதிகமான மருத்துவ குணங்கள் கொண்டது. எனவே தேனுடன் ஒரு ஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்து அதை அப்படியே உதட்டின் மேல் ஸ்க்ரப் போல மசாஜ் செய்து ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவி வர விரைவில் வித்தியாசத்தை காணலாம்.

பீட்ரூட்டை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை மிக்ஸியில் சேர்த்து அரைத்து அத்துடன் ஊறவைத்த வெந்தயத்தையும் சேர்த்து அரைத்து வடிகட்டி காலை, மாலை என இரு வேளைகளில் உதட்டின் மேல் தடவி மசாஜ் செய்ய உதட்டின் கருமை நீங்கும்.கருமையான உதடு சிவப்பாக மாற சில டிப்ஸ்!

அப்படி இல்லை என்றால் வெறும் பீட்ரூட்டை நறுக்கி அதில் ஒரு சிறிய துண்டை எடுத்து அப்படியே உதட்டின் மேல் தடவ உதடு சிவப்பாக மாறும். இம்முறையை நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 முறை பயன்படுத்தலாம். அதாவது உதடு காய காய பீட்ரூட்டை தடவ நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

பின்னர் எலுமிச்சம்பழத்தை மெல்லியதாக நறுக்கி அதில் உப்பு போட்டு உதட்டில் தடவி வர அதில் உள்ள பிளீச்சிங் தன்மை உதட்டில் இருக்கும் இறந்த செல்களை அழித்து கருமையை நீக்கி சிறப்பாக மாற்றும்.கருமையான உதடு சிவப்பாக மாற சில டிப்ஸ்!

அடுத்தது ஐஸ் கட்டிகள் பயன்படுத்துவதாலும் இறந்த செல்கள் நீங்கி உதட்டின் கருமை நீங்குவதோடு மட்டுமல்லாமல் மென்மையாகவும் மாறும்.

இருப்பினும் இம்முறைகளை பின்பற்றும்போது ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

MUST READ