நெல்லிக்காயில் விட்டமின் ‘சி’ நிறைந்து காணப்படுகின்றது. இது பல நோய்களை சரி செய்ய உதவுகிறது.
நெல்லிக்காய் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த சத்தான பழமாகும். இதில் விட்டமின் ‘சி’ அதிகமாக காணப்படுகிறது. நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகாிக்கிறது. தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது. இன்னும் இது போன்ற பல நன்மைகளை நெல்லிக்கனி வழங்குகிறது. அத்தகைய நெல்லிக்காயின் முக்கிய பயன்களை காணலாம்.
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவுகின்றது. நெல்லிக்காயை தொடா்ந்து சாப்பிட்டால், முடி மற்றும் சருமம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தேங்காய் எண்ணெய்யில் நெல்லிக்காயை காய்ச்சி தேய்த்தால், இளநரை மற்றும் முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு இது தீா்வாக அமைகிறது.
மேலும், நெல்லிக்காய் செரிமான பிரச்சனையை சீராக்குவதுடன், உடலில் உள்ள பித்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளைத் தடுக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது. வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் கண் குறைபாடுகளைக் நீக்குகிறது. நரம்புகளுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வைட்டமின் சி, ஏ, கால்சியம், இரும்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நெல்லிக்காயில் நிறைந்து காணப்படுவதால் அதனை உண்டு அனைவரும் பயன் பெறலாம்.



