spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நரைமுடி கருப்பாக மாற – இதை தொடா்ந்து ட்ரை பண்ணுங்க...

நரைமுடி கருப்பாக மாற – இதை தொடா்ந்து ட்ரை பண்ணுங்க…

-

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் இளநரை, நரைமுடி போன்ற பிரச்சனைகள் பலருக்கும் அதிகமாகவே காணப்படுகின்றன. இதனால் பலரும் ஹோ்டையை நாடுகின்றனா். இனி அதெல்லாம் தேவையில்லை. இயற்கையான முறையில், தலைமுடியை கறுப்பாக மாற்ற உதவும் கருஞ்சீரக எண்ணெயை எப்படி தயாாிக்கலாம் என்று பாா்க்கலாம்.நரைமுடி கருப்பாக மாற – இதை தொடா்ந்து ட்ரை பண்ணுங்க... தேவையான பொருட்கள்: கருஞ்சீரகம்- 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 2 கப்

  எண்ணெய் தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கருஞ்சீரகத்தினை சேர்த்து நன்கு பொடி, பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

we-r-hiring
  • அடுத்து ஒரு இரும்பு வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும். எண்ணெய் சூடானதும் அதில் அரைத்த கருஞ்சீரகத்தை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதித்ததும் எண்ணெய் நிறம் மாற ஆரம்பிக்கும். எண்ணெய் நிறம் மாறியதும் அடுப்பை அணைக்கவும். எண்ணெய் நன்கு ஆறியதும், அதனை வடிகட்டி தலைமுடியில் வோ்க்கால்களில் படும்படி தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.

இந்த எண்ணெயை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வந்தால் நரைமுடி பிரச்சனைகள் அனைத்தும் நிரந்தரமாக மாறும்.

கிருஷ்ணதுளசி முதல் காட்டுத் துளசி வரை: துளசியின் வகைகள், குணங்கள் மற்றும் நோய்தீர்க்கும் ஆற்றல்கள்

MUST READ