இன்று நம் வீட்டின் கொல்லைப்புறத்திலும், தோட்டங்களிலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு அரிய மூலிகையைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்—அதுதான் துளசி.
சாதாரண காய்ச்சலுக்கு மருந்து முதல், கடுமையான கப நோய்கள் மற்றும் தோல் வியாதிகள் வரை பலவற்றைத் தீர்க்கும் சக்தி இந்தத் துளசிக்கு உண்டு. ஆனால், துளசியில் ஒரே ஒரு வகை மட்டுமில்லை.கிருஷ்ணதுளசி, வெள்ளை துளசி (ராமதுளசி), காட்டுத் துளசி, மற்றும் சிறப்பு வாய்ந்த மருவம் என ஒவ்வொரு வகைக்கும் தனித்தன்மைகள் உள்ளன.

துளசி வகைகளின் தனித்தன்மைகள்:
கிருஷ்ணதுளசி
கிருஷ்ண துளசி தொண்டை நோய். இருமல். கப நோய், விஷக்காய்ச்சல், வாத நோய், முக்கில் தோன்றும் விரணம், காதுவலி, சிறுநீர்த்தடை ஆகியவற்றைப் போக்கும். கப நோய்களைப் போக்குவதில் இதன் விதைகள் மிக்க சிறந்தவை.
வெள்ளை துளசி
இதுவே ராமதுளசி என்றும் சொல்லப்படுகிறது. கார்ப்புச் சுவை கொண்டது. கசப்பு துணைச் சுவை யாகும். உஷ்ண வீரியமுள்ளது. சுவையூட்டும். வாதத்தையும், சிலேத்துமத்தையும் தணிக்கும்.
சீனா, பிரேஜில் ஆகிய நாடுகளிலும் இது காணப் படுகிறது. குட்டம் (தொழுநோய்) முதலிய நோய்களைத் தீர்க்கும். இதில் ஆண், பெண் என இருவகை உண்டு. பெண்களுக்குத் தோன்றும் நோய்களுக்கும், உடலின் இடது பக்கத்தில் தோன்றும் நோய்களுக்கும் பெண் இனச் செடியும்.
ஆண்களுக்கும் உடலின் வலது பக்கத்தில் தோன்றும் நோய்களுக்கும் ஆண் இனச் செடியும் மிக்க பயன் தரும்.
விசுவதுளசி விதை
விசுவதுளசிவிதை குளுமைத் தன்மை கொண்டது. நீரிழிவு, இரத்த அதிசாரம். பெருவயிறு எனும் நோய் களைத் தணிக்கும். விசுவதுளசி இலை கிருமிகளையும், ஸர்ப்பவிஷத்தையும் போக்கும்.
பீபீ துளசி
பீபீ துளசி என்னும் வகை வங்காளம், பீகார். அயோத்தி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஈரான், திருவனந்தபுரம் முதலிய பகுதிகளில் காணப் படுகிறது. குட்டம், காய்ச்சல், இருமல், சோர்வு முதலிய நோய்களைத் தணிக்கும். பிள்ளைப் பேற்றின் போது தோன்றும் நோய்களிலும், காய்ச்சல், கெட்ட நீர் உடலில் சேர்வதால் தோன்றும் காய்ச்சல், சடராக்னிக்குறைவு (சடராக்னிக்குறைவு என்பது வயிற்றில் உள்ள செரிமானத் தீயின் சக்தி குறைந்து, உணவு சரியாகச் செரிக்கப்படாமல் மந்தமடைவதைக் குறிக்கிறது.), வாந்தி, காதுவலி முதலியவற்றிலும் மிக்க பயன்தரும்.
துகாசமீயம்
என்ற ஒருவகை நம் நாட்டு மேற்குப் பகுதியிலும், ஈரான் நாட்டிலும் காணப்படுகிறது. இது தொண்டை நோய், கிருமி நோய் முதலியவற்றைப் போக்கப் பயன் படுத்தப்படுகிறது. உடல் இளைத்தவன் இதைப் பயன் படுத்துவதால் வலிமையும், செழிப்பும் பெறுவான்.
மருவம்:
மருவம் நறுமணம் கொண்டதாகும். கார்ப்புச் சுவையும், கசப்புச் சுவையும் கொண்டிருக்கும். இலகுத் தன்மையும். உஷ்ண வீரியமும் கொண்டதாகும். உட்கொண்டபின் கார்ப்புச் சுவை கொள்ளும். செரிமானத் தீ -யை வளர்க்கும். இதயத்திற்கு நன்மை தரும். சுவையூட்டும் பித்தத்தை வளர்க்கும். கபவாதங்களைத் தணிக்கும், குட்டம். கிருமி நோய், மலக்கட்டு, தேள் முதலியவற்றின் நஞ்சு ஆகியவற்றைத் தணிக்கும்.
காட்டுத் துளசி:
காட்டுத் துளசி கார்ப்புச்சுவையும், வறட்சித் தன்மையும். இலகு குணமும் கொண்டதாகும்.எரிச்சலைத் தோற்றுவிக்கும். சுவையூட்டும். இதயத்திற்கு நன்மை தரும். சடராக்னியை வளர்க்கும். பித்தத்தை மிகுதியாக்கும். கபவாதங்களைத் தணிக்கும். இரத்த தோஷம், அரிப்பு. கிருமி. நஞ்சு ஆகியவற்றைப் போக்கும். எளிதில் பிரசவமாகச் செய்யும். கண் நோய் களைத் தீர்க்கும்.
காட்டுத் துளசி – நீண்ட வளரும் வகை – கார்ப்புச் சுவையும், உஷ்ண வீரியமும், கொண்டதாகும். வாதத் தைப் போக்கும். தோல் நோய். அக்கி. நஞ்சு ஆகிய வற்றைத் தணிக்கும், காட்டுத் துளசி விதை நாவறட்சி யையும், சோர்வையும் போக்கும்.
குறிப்பு :
நீங்கள் ஏதேனும் நோய், உடல்நலக் குறைபாடு அல்லது கர்ப்பம் போன்ற சிறப்புச் சூழ்நிலைகளில் இருந்தால், இந்த மூலிகைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு தகுதிவாய்ந்த மருத்துவர் அல்லது பாரம்பரிய மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது கட்டாயமாகும்.
இந்த மூலிகைகளின் குறிப்பிட்ட அளவுகள், உட்கொள்ளும் முறை மற்றும் பக்க விளைவுகள் பற்றிய முழுமையான மருத்துவ வழிகாட்டலுக்கு நிபுணரை அணுகவும்.


