spot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை தரும் வெட்டிவேர் எண்ணெய்!

சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை தரும் வெட்டிவேர் எண்ணெய்!

-

- Advertisement -

வெட்டிவேர் எண்ணெய் சருமத்திற்கும் கூந்தலுக்கும் பல நன்மைகளை தருகிறது.சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை தரும் வெட்டிவேர் எண்ணெய்!

வெட்டிவேர் என்பது இயற்கையிலேயே குளிர்ச்சி, நறுமணம் மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. வெட்டிவேர் எண்ணெய் என்பது உடலுக்கும், மனதுக்கும் பல நன்மைகளை தருகிறது. மேலும் இது சருமத்தை பாதுகாக்கவும், சுருக்கங்களை குறைக்கவும் பயன்படுவதோடு கூந்தலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

we-r-hiring

சருமத்திற்கான நன்மைகள்

வெட்டிவேர் எண்ணெயானது சருமத்தின் வெப்பத்தை குறைத்து புத்துணர்ச்சி தருகிறது. தோலில் ஏற்படும் எரிச்சல் போன்றவற்றை குறைக்க உதவுகிறது.

வெட்டிவேர் எண்ணெயை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து கலந்து முகத்தில் தேய்த்து வர சருமத்தில் உள்ள ஈரப்பதம் குறையாமல் இருக்கும். சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை தரும் வெட்டிவேர் எண்ணெய்!இது இயற்கையான மாய்ஸுரைசராக பயன்படுகிறது. இது முகப்பருக்களையும், முகத்தில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது. குளிக்கும்போது இந்த எண்ணெயை மூன்று முதல் நான்கு துணிகள் தண்ணீரில் விட்டு குளித்தால் உடல் சூடு தணியும். புத்துணர்ச்சி கிடைக்கும்.

கூந்தலுக்கான நன்மைகள்

வெட்டிவேர் எண்ணெயை உச்சந்தலையில் தேய்த்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். அதாவது தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணையை கலந்து தலையில் தடவி மசாஜ் செய்தால் முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனைகள் குறைவதோடு முடியின் வேர் வலுவாகும்.

ஒரு ஸ்பூன் வெட்டிவேர் எண்ணெய், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை கலந்து தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி வர பொடுகு, அரிப்பு போன்றவை குணமாகும்.சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை தரும் வெட்டிவேர் எண்ணெய்!

இது தவிர ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய், ஒரு ஸ்பூன் வெட்டிவேர் எண்ணெய் ஆகியவற்றை தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவினால் முடி மிருதுவாகவும், நீளமாகவும் வளரும்.

மேலும் இந்த எண்ணெயை ஷாம்புவுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். இருப்பினும் இது தொடர்பாக வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ