Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்முகத்தில் பருக்கள் வராமல் தடுக்க என்ன செய்வது?

முகத்தில் பருக்கள் வராமல் தடுக்க என்ன செய்வது?

-

பெரும்பாலானவர்களுக்கு முகப்பருக்கள் என்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அதற்காக பலரும் மார்க்கெட்டில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு. அது சருமத்திற்கு பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

அதனால் உணவு பழக்க வழக்கங்கள் மூலம் முகப்பருக்கள் உண்டாவதை தடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்படி பருக்கள் வந்திருந்தால் அவற்றை சரிசெய்வதற்கான வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.முகத்தில் பருக்கள் வராமல் தடுக்க என்ன செய்வது?

1. முதலில் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.

2. எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

3. நாள் ஒன்றுக்கு முகத்தை மூன்று முறை கழுவ வேண்டும்.

4. வெளியில் செல்லும்போது முகத்தை மறைத்துக் கொள்வது அவசியம். ஏனென்றால் மாசுக்கள் முகத்தில் படுவதால் முகப்பருக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

5. கெமிக்கல் நிறைந்த மேக்கப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

6. இரண்டு இஞ்சி துண்டுகளை இடித்து சாறு எடுத்து பிழிந்து அடியில் உள்ள மண்டியை தேனுடன் கலந்து பருக்கள் மீது தடவி வர மூன்று நாட்களில் பருக்கள் குணமடையும்.

7. லவங்கம் என்பது சிறந்த ஆன்ட்டிசெப்டிக் மருந்தாகும். இது முகப்பருக்கள் மறைவதற்கு பயன்படுகிறது. ஒரு லவங்கத்தை எடுத்து, அதில் சில சொட்டுகள் பால் சேர்த்து, சுத்தமான கல்லில் அந்த லவங்கத்தை தேய்த்து வர அதிலிருந்து பேஸ்ட் கிடைக்கும். அந்த பேஸ்ட்டை முகத்தில் பருக்கள் இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் பருக்கள் மறையும்.முகத்தில் பருக்கள் வராமல் தடுக்க என்ன செய்வது?

8. பாதி அளவு உருளைக்கிழங்கை எடுத்து அதனை தோல் சீவி துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டி சாற்றை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். நான்கு ஸ்பூன் அளவுக்கு உருளைக்கிழங்கு சாற்றுடன் இரண்டு ஸ்பூன் அளவு காய்ச்சாத பால் சேர்த்துக் கொள்ளவேண்டும். அத்துடன் கால் ஸ்பூன் அளவுக்கு சுத்தமான மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும். முகத்தை நன்கு கழுவிய பின் காட்டன் துணியால் உருளைக்கிழங்கு சாறு, பால், மஞ்சள் கலந்த கலவையை தொட்டு முகத்தில் தேய்க்க வேண்டும். அதன் பின் 15 நிமிடங்கள் காயவைத்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் இரண்டு நாட்களில் பருக்கள் காணாமல் போய்விடும்.

இந்த முறைகளை எல்லாம் ஒருமுறை செய்து பார்த்துவிட்டு ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என்றால் பருக்கள் ஏற்படும் சமயங்களில் பயன்படுத்தி வரலாம்.

MUST READ