தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இது தவிர இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், ஆன்ட்டி ஆக்சிடென்ட்களும் நிறைந்துள்ளது.

அடுத்தது தேன் என்பது இயற்கையாகவே இனிப்பு சுவையுடையது. இது பாக்டீரியா எதிர்ப்பு, தொண்டை மட்டும் ஜீரண மண்டலத்தை சீர்படுத்தும் தன்மை கொண்டது. இந்நிலையில் நெல்லிக்காயும், தேனும் சேரும்போது பல நன்மைகள் கிடைக்கிறது.
அதாவது தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் என்பது பாரம்பரிய நாட்டு மருந்தாகும். இதை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், செரிமானம் மேம்படும், இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும், சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும், சளி, தொண்டை புண், கண் எரிச்சல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இது தவிர இது ரத்த சோகையையும் நீக்க உதவுகிறது.
அடுத்தது தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடும் போது முகப்பொலிவு அதிகமாகி, சருமம் அழகாகும். இது முகத்திற்கு மட்டுமல்லாமல் முடி வளர்ச்சிக்கும் பயன்படுகிறது. எனவே தினமும் ஒரு சிறிய அளவில் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை எடுத்துக் கொள்வதால் இளமையான தோற்றத்தை பெறலாம். இதனை சிறிய அளவில் எடுத்துக் கொள்வதால் இன்சுலின் செயல்பாடு அதிகரிக்கும். ஆனாலும் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


