எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 மாதமாக தரவேண்டிய வாடகை பாக்கி ரூ.50 கோடியை இந்தியன் ஆயில் நிலுவை வைத்திருந்தது. இதனை கண்டித்து தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்மண்டல பகுதிகளில் செயல்படும் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நிலுவைத் தொகையை நாளைக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி அளித்தது. இதனை ஏற்றுக்கொண்ட டேங்கர் லாரி உரிமையாளர்கள் தங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
