
வருமான வரித்துறை பான் கார்டு விண்ணப்பிக்கும் முறையில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. வரும் ஏப்ரல் 1, 2026 முதல், புதிய பான் கார்டு பெற ஆதார் கார்டு மட்டும் போதாது; பிறந்த தேதிக்கான கூடுதல் ஆவணத்தைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முக்கிய மாற்றங்கள் என்ன?

இதுவரை ஆதார் கார்டை மட்டுமே அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பிறந்த தேதி சான்று என மூன்றிற்கும் பயன்படுத்தி பான் கார்டு பெற்று வந்தோம். ஆனால், ஏப்ரல் 1 முதல் ஆதார் கார்டு பிறந்த தேதிக்கான (Date of Birth) சான்றாக ஏற்றுக்கொள்ளப்படாது.
சமர்ப்பிக்க வேண்டிய கூடுதல் ஆவணங்கள்:
பிறந்த தேதியை உறுதிப்படுத்த பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஆதார் கார்டுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்:
பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate)
வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)
10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (SSLC Marksheet)
ஓட்டுநர் உரிமம் (Driving License)
கடவுச்சீட்டு (Passport)
கடைசி தேதி:
ஆதார் கார்டை மட்டும் வைத்து பான் கார்டு விண்ணப்பிக்க விரும்புவோர் மார்ச் 31, 2026-க்குள் விண்ணப்பித்துவிட வேண்டும்.
ஏப்ரல் 1 முதல் புதிய விண்ணப்ப படிவங்கள் (Form No. 94 என எதிர்பார்க்கப்படுகிறது) அறிமுகப்படுத்தப்படும். பழைய படிவங்கள் செல்லாது.
