விமானப்படை மார்ச் 23 அன்று பாகிஸ்தான் தினத்தைக் கொண்டாடியது. இந்த நிகழ்சியில் பாகிஸ்தான் விமானப்படை பல சாகசங்களுக்கு ஏற்பாடு செய்தது. பாகிஸ்தான் விமானப்படையின் சாகச காணொளிகள் வெளிவந்துள்ளன. இதில், பாகிஸ்தான் விமானப்படை நாட்டைப் பாதுகாப்பதில் எப்படி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது என்பது கூறப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் தினத்தன்று விமானப்படையைப் புகழ்ந்து கூறப்படும் பாரம்பரிய விஷயங்கள்தான். ஆனால் இந்த முறை வித்தியாசமாக இந்திய விமானப்படையின் Su-30MKI போர் விமானம் குறித்த பாகிஸ்தான் விமானப்படையின் கவலையே அதிகரித்துள்ளது.
இந்திய விமானப்படையின் Su-30MKI-ஐ சமாளிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதைச் சுற்றியே பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சியும், திட்டமிடலும் சுழல்கிறது என்பதை இந்த காணொளி காட்டுகிறது. இந்த விமானம் இந்திய விமானப்படையின் சக்திவாய்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆயுதமாகும்.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி பிரிவின் தகவல்படி, பாகிஸ்தான் விமானப்படை வீடியோவில், கிரிஃபின் படைப்பிரிவின் தலைவர் தனது அணியை ஒரு சிறப்புப் பணிக்காகத் தயார்படுத்துவதைக் காட்டியது. இதில், அவர் தனது கையில் இந்திய விமானப்படையின் Su-30MKI -ன் ஒரு சிறிய மாடலை வைத்திருக்கிறார்.
அதைப் பற்றி அவர் பேசுகிறார். அதாவது பாகிஸ்தான் விமானப்படை இந்திய ஜெட் விமானங்களை சமாளிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறது. இந்த விமானத்திற்கு பாகிஸ்தான் விமானப்படை எவ்வளவு தீவிரமாக தயாராகி வருகிறது என்பதை இது காட்டுகிறது.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து Su-30MKI விமானங்களைப் பெற்றுள்ளது. இது உலகின் சிறந்த ஜெட் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆகாயத்திலும், தரையிலும் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. இந்த விமானத்தை இந்தியா பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான் விமானப்படை இந்த ஜெட் விமானத்தை தனக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. குறிப்பாக 2019 ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு, Su-30MKI பற்றிய பாகிஸ்தானின் கவலைகள் அதிகரித்துள்ளன. இந்திய விமானப்படையிடம் Su-30MKI களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது