Homeசெய்திகள்அரசியல்வாரிசு இல்லாதவர்கள் வாரிசு அரசியலை பேசலாம் - மா.சுப்பிரமணியன் பேச்சு

வாரிசு இல்லாதவர்கள் வாரிசு அரசியலை பேசலாம் – மா.சுப்பிரமணியன் பேச்சு

-

யாருக்கெல்லாம் வாரிசு இல்லையோ அவர்கள் வாரிசு அரசியலைப் பற்றி பேசலாம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தீவுத்திடல் அருகே ஒன்றிய அரசின் Council for Leather Exports India தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் பெருநகர சென்னை மாநகர காவல்துறை சார்பில் Soles for Souls Marathon 2024 போதை பொருள் இல்லாத சமூகத்திற்கான விழிப்புணர்வு மாராத்தானை நடத்தியது….

10 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 3 கிலோமீட்டர் என்று நடைபெற்ற விழிப்புணர்வு மாராத்தானை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து வெற்றி பெற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார்….

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்….

தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 391 குழுக்களாக பிரிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்…

தடை செய்யப்பட்ட பாண் பராக், குட்கா போன்ற பொருட்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது….

கடந்த 01.11.2023 முதல் 15.09.2024 வரை தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்து 6157 குடோன்கள் மற்றும் வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா விற்பனை செய்த 19,822 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் 1 லட்சத்து 32,890 கிலோகிராம், தடை செய்யப்பட்ட பொருட்களின் தோராய மதிப்பு 10 கோடியே 87 லட்சத்து 91,708 ஆகும், தொடர்ந்து தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது….

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றத்தை மிகச் சிறப்பாக தந்துள்ளார். உதயநிதி அவர்களுக்கு எப்பொழுது துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர், பொதுமக்கள் மட்டுமல்ல திமுகவினரின் எதிர்பார்ப்புகளையும் முதலமைச்சர் நிறைவேற்றி இருக்கிறார். தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள் என்றார் மா.சுப்பிரமணியன்.

உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக  பொறுப்பேற்ற பிறகு, உலக அளவில் விளையாட்டு துறை தமிழ்நாடு தலைமையகமாக மாற்றி தந்து உள்ளார். 2 கோடி இளைஞர்களுக்கு  விளையாட்டுத்துறையை குறித்து விழிப்புணர்வு செய்துள்ளார்.

விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு நிதி உதவி செய்வது மட்டுமல்லாமல், ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகளையும் வழங்கி வருகிறார்….

தமிழ்நாடு அரசு  திட்டங்களை மக்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்து சென்று கொண்டிருக்கிறார்…

நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி 40-க்கு 40 தொகுதி வெற்றி பெற்றோமோ அதுபோல் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது மக்களிடத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது என்று மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

MUST READ