spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்2026 தேர்தல் - இன்னும் 90 நாட்கள் உள்ளது…கூட்டணியில் பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது –...

2026 தேர்தல் – இன்னும் 90 நாட்கள் உள்ளது…கூட்டணியில் பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது – நயினார் நாகேந்திரன்

-

- Advertisement -

2026 தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் 90 நாட்கள் இருக்கிறது. அதற்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நெல்லையில் செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளாா்.2026 தேர்தல் - இன்னும் 90 நாட்கள் உள்ளது…கூட்டணியில் பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது – நயினார் நாகேந்திரன்

நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களின் சந்திப்பின் போது நிகழ்கால அரசியல் நிலவரம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளாா்.

we-r-hiring

அதில் முதன்மையாக, 100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியது மிகப்பெரிய பிழையை பாஜக செய்திருக்கிறது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார் என்ற கேள்விக்கு, ”அவர்கள் ஆட்சியல் அந்த திட்டத்தை கொண்டு வந்தபொழுது காந்தி பெயரை வைக்கவில்லை. இப்போது மட்டும் காந்தியின் மீது எப்படி அக்கறை வந்துள்ளது என பதிலளித்துள்ளாா்.

டிடிவி ஓபிஎஸ் இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணி இணைவதற்கு எப்போது காலம் கனியும் என்ற கேள்விக்கு, ”என்னை பொருத்தவரை திமுக அரசு அகற்றப்பட வேண்டும். அதில் யார் வேண்டுமானாலும் வரலாம். வரவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்” என்று தெரிவித்துள்ளாா்.

பாஜக முன்னாள் மாநில அண்ணாமலைக்கு எந்த பதவியும் இதுவரை கொடுக்கவில்லை. அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகளை இணைக்கும் பணியை செய்கிறாரா என்ற கேள்விக்கு, ”அவர் இப்போதும் பதவியில் தான் இருக்கிறார். எல்லா நிகழ்ச்சிகளிலும் நாங்கல் சேர்ந்துதான் பயணிக்கிறோம்” என்று கூறினாா்.

இனிமேல் தான் எங்களின் ஆட்டம்” இருக்கிறது என்று நீங்கள் ஒரு மேடையில் பேசினீர்களே கூட்டணி கணக்கு என்ன என்ற கேள்விக்கு, ”கூட்டணிக்கு இன்னும் 90 நாட்கள் இருக்கிறது அதற்குள் அதிக மாற்றம் இருக்கிறது வந்தவுடன் தெரிவிக்கிறேன்” என நயினார் தெரிவித்துள்ளாா். .

நடிகர் விஜயை புறந்தள்ளிவிட்டு அரசியல் சூழ்நிலை இருக்காது என்ற கேள்விக்கு  பதிலளித்த நயினார் நாகேந்திரன், ”இதுவரையிலும் நடிகர் தம்பி விஜய் பொருத்தவரை ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை. அவருக்கு மீடியாவில் இமேஜை கிரியேட் செய்கிறீர்கள். தமிழகத்தில் மிகப்பெரிய தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவருக்குப் பிறகு தமிழகத்தில் கட்சி ஆரம்பித்து நடத்துவது இயலாத காரியம். அதில் மிகப்பெரிய சிரமம் இருக்கிறது” என விமர்சித்துள்ளாா்.

விஜயகாந்த் குறித்து பெசிய அவர், ”விஜயகாந்த் மிகப்பெரிய நல்ல தலைவர். அவர் இருக்கும் பொழுது அரசியலில் முழுமையக கொண்டுவர முடியவில்லை. அவர் இறந்த பிறகு துணைவியார் கட்சியை நல்ல முறையில் வழிநடத்தி வருகிறார்” என்றாா்.

தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பில் வாய்ப்பு இருக்கிறதா என்ற கெள்விக்கு, ”அதைப் பற்றி நான் இப்பொழுது கருத்து கூற முடியாது ”என பதிலளித்தாா்.

எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்ஐ ஏற்றுக்கொள்வது போல ஒரு கருத்து பரவுகிறது அது உண்மையா என்ற கேள்விக்கு, ”அது உட்கட்சி விவகாரம். அது உண்மையா? பொய்யா என்பது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது ”என்று பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

பிரேம் ஆனந்த் சின்ஹா ஆவடி காவல் ஆணையராக பொறுப்பு…

MUST READ