spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்240 கோடி வரி ஏய்ப்பு... அண்ணாமலை சேர்த்த 800 கோடி சொத்து... பகீர் கிளப்பும் திருச்சி...

240 கோடி வரி ஏய்ப்பு… அண்ணாமலை சேர்த்த 800 கோடி சொத்து… பகீர் கிளப்பும் திருச்சி சூர்யா..!

-

- Advertisement -

தனது உறவினர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறித்து விளக்கமளித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ‘‘தி.மு.க-வில் கொங்குப் பகுதியில் இருக்கிற எல்லோரும் ஏதோவொரு வகையில் உறவினர்தான். நானும், கரூர் அ.தி.மு.க விஜய பாஸ்கரும் பங்காளிகள். கோவையில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டவர்கள் பாதி பேர் எனது உறவினர்கள்தான். சோதனை நடந்தது என்னுடைய குடும்பமா? என் ரத்த சொந்தமா? அப்படி இருந்தால் இந்தக் கேள்வி நியாயம்’’ என விளக்கமளித்து இருந்தார்.

"கோவையில் என்.ஐ.ஏ. கிளை, காமராஜர் உணவகங்கள்..."- வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை!

we-r-hiring

இந்நிலையில், பாஜகவில் இருந்து நீக்கட்டப்பட்ட திருச்சி சூர்யா தனது எக்ஸ் தளத்தில் ‘‘அண்ணன் அண்ணாமலைக்கு வணக்கம்… இன்று உங்களுடைய பிரஸ்மீட் பார்த்தேன், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் செந்தில் பாலாஜி, ஜோதிமணி, விஜயபாஸ்கர் என பதட்டத்தில் உளறினீர்கள். பாவம், உங்களுடைய ரீல் அந்து போய் பல மாசமாச்சு, நாடகம் முடியும் நேரமிது.

அண்ணாமலை மூன்றே வருடத்தில் பத்து ஆயிரம் கோடி சொத்து சேர்த்துவிட்டார் என முதன்முதலாக நான் சொன்ன போது உங்களிடம் கூலிக்கு வேலை செய்யும் வார்ரூம் ஆட்களும், உங்களுடைய உண்மை முகத்தை உணராத பாஜக தொண்டர்களும் என்னை திட்டி தீர்த்தார்கள். இன்று நான் சொன்னது முற்றிலும் உண்மை என பாஜக ஆளும் ஒன்றிய அரசின் வருமான வரித்துறையே உறுதி செய்துள்ளது.

நீங்கள் DMK Files வெளியிட்ட பொழுது பினாமி சொத்துகள் எல்லாம் திமுக அரசியல்வாதிகள் கொள்ளையடித்த சொத்து என கணக்கு சொன்னீர்களே இப்போது அதே லாஜிக் உங்களுக்கும் பொருந்தும் அல்லவா?

உங்களின் ஒரு பினாமி சத்திரபட்டி செந்தில்குமாரிடம் இருந்து மட்டும் ₹10 கோடி ரொக்க பணம், ₹240 கோடி வரி ஏய்ப்பிற்கான ஆதாரம், பல நூறு கோடிகள் சொத்து தொடர்பான ஆவணம் பறிமுதல் செய்துள்ளது ஒன்றிய அரசின் வருமான வரித்துறை.

https://x.com/TiruchiSuriyaa/status/1871576006219153858

சரி, ஏழாவது கேள்விக்கு வருவோம். உங்க அக்கா புருஷன் சிவகுமாரும் செந்தில்குமாரும் அண்ணாமலையார் சேம்பர்ஸ் நிறுவனத்தில் கூட்டாளிகளா இல்லையா ? ஊழல் என்றாலே ஊளையிட்டுக் கொண்டு வருவீர்களே 240 கோடி வரியைப்பு என்றால் 800 கோடி சொத்து சேர்த்ததில் 30% சதவீத வரியைப்பு நடந்துள்ளது கணக்கு சரியா மலை?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ