spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பஞ்ரங் தள அமைப்புக்கு தடையா? காங்., முடிவுக்கு நடிகை ரம்யா எதிர்ப்பு

பஞ்ரங் தள அமைப்புக்கு தடையா? காங்., முடிவுக்கு நடிகை ரம்யா எதிர்ப்பு

-

- Advertisement -

congress

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் கர்நாடக மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது . காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தள அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது . காங்கிரஸின் இந்த தேர்தல் வாக்குறுதிக்கு பாஜகவும் இந்து அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

we-r-hiring

பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியும் காங்கிரஸின் இந்த தேர்தல் வாக்குறுதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ’’ ஜெய் பஜ்ரங் பாலி’’ என்று முழக்கமிட்டு வருகிறார். எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியும் கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான நடிகை ரம்யா, மண்டியா மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, அவரும் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

karnataka election

பஞ்ரங் தள அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என்கிற காங்கிரசின் தேர்தல் வாக்குறுதி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’ பஜ்ரங் தள அமைப்பு தடை என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு பிடிக்கவில்லை. ஒன்று தடை செய்தால் மற்றொன்று வரும். வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் இருக்கிறது. வெறுப்பு பேச்சுகள் பேசுபவர்களுக்கு எதிராக போலீசார் பொறுப்பேற்று புகார் பதிவு செய்ய வேண்டும் . அதை நடைமுறைப்படுத்தவும் நீதிமன்றம் பரிந்துரைத்திருக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க ஒரு அமைப்பை தடை செய்ய இடம் இல்லை.

நாம் ஜனநாயக அமைப்பில் இருக்கிறோம் . சட்டத்தை கடைபிடிப்பது முக்கியம். சட்டத்தை அமல்படுத்துவோம் என சொல்வதற்கு பதிலாக பஜ்ரங் தள அமைப்புக்கு தடை என்று சொன்னது போல் இருக்கிறது ’’என்றவர், அது தொடர்பாக மேலும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ‘’நான் தேர்தல் அறிக்கையை முழுமையாக பார்க்கவில்லை’’ என்று சொல்லி சமாளித்திருக்கிறார்.

MUST READ