Homeசெய்திகள்அரசியல்அதானியை வைத்து இந்தியாவைவே வேரறுக்க சூழ்ச்சி... மேற்கத்திய நாடுகள் சதி... துணைபோகும் எதிர்கட்சிகள்..?

அதானியை வைத்து இந்தியாவைவே வேரறுக்க சூழ்ச்சி… மேற்கத்திய நாடுகள் சதி… துணைபோகும் எதிர்கட்சிகள்..?

-

- Advertisement -
kadalkanni

சுதந்திரமான கொள்கை முடிவுகளை எடுக்கும் இந்தியாவை அச்சுறுத்தி தன் வழிக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் தான், தொழிலதிபர் அதானி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கை, அதனைத் தொடர்ந்து அமெரிக்க வழக்கறிஞர் தொடுத்த வழக்கு, அதானிக்கு பிடிவாரண்ட்… என அடுத்தடுத்து கிளம்பியுள்ள பிரளயங்களால் இந்திய அரசும், வர்த்தக அதிபர்களும் பெரும் கவலை கொண்டுள்ளன. ரஷ்ய ஊடக அமைப்பான ஸ்புட்னிக்கின் இந்திய பதிப்பான ஸ்புட்னிக் இந்தியா இதனை ஒரு ‘இந்தியாவிற்கெதிரான மிகப்பெரிய சூழ்ச்சி’ என்று கருவதாகக் கூறுகிறது. மோடி அரசை சீர்குலைக்க விரும்புவதாக நம்பப்படுகிறது. பங்களாதேஷில் அமெரிக்காவின் பங்கு குறித்தும் கவலை எழுந்துள்ளது.

சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (SEBI)க்கு எதிரான இந்திய நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை பலவீனப்படுத்துவதே ஹிண்டன்பர்க்கின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

ஹிண்டன்பர்க், இந்திய அதிகாரிகளையும் குறி வைப்பது பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தை சீர்குலைக்க மேற்கத்திய சக்திகளின் முயற்சி என்று கூறுகிறார்கள்.

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது, வரும் பத்தாண்டுகளில் அது அமெரிக்காவை முந்தலாம். டாலரின் பயன்பாடு குறைந்து வரும் நிலையில் இந்திய ரூபாயின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையின் ஸ்திரத்தில் வலுவான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.விமான நிலையங்களை தாரைவார்க்க எத்தனை டெம்போ பணம் பெற்றீர்கள்? - மோடிக்கு ராகுல் கேள்வி

இதனால்தான் இந்திய அரசு நிறுவனங்களை அவதூறு செய்யும் நேரடி முயற்சியில் மேற்கத்திய சக்திகள் குற்றம்சாட்டி வருவதாகச் சொல்கிறார்கள். இந்த தாக்குதல் அதானி மீது மட்டுமல்ல, செபியின் நேர்மை மீதும் ஏவப்பட்ட தாக்குதல். இதேபோல், அவர்களின் முந்தைய அறிக்கை (ஜனவரி 2023 ல்) எல்ஐசி, எஸ்பிஐ மற்றும் அதானி குழும பங்குகளில் முதலீடு செய்துள்ள பிற பொதுத்துறை வங்கிகள் போன்ற முக்கிய அரசு நிறுவனங்களிடையே பீதியை உருவாக்கியது

இந்தியாவின் பங்குச் சந்தை மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதம் 2019 ல் 77% ஆக இருந்தது, இது 2023-24 ல் 124% ஆக அதிகரித்துள்ளது. சந்தைகளில் ஏற்படும் எந்த ஏற்ற இறக்கங்களும் பங்கு சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்துள்ள மில்லியன் கணக்கான நடுத்தர வர்க்க இந்தியர்களுக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.

‘‘அதானியின் பங்குகளைக் குறைத்து லாபம் ஈட்ட வேண்டும் என்ற பொருளாதார நோக்கமும் இதற்குப் பின்னால் உள்ளது. அதானி மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 10-12 கோடி மோசடி செய்பவர்கள் கூட சிறைக்கு அனுப்பப்படுகிறார். ஆனால் அதானி 2000 கோடி ஊழல் செய்து பாதுகாப்பாக இருக்கிறார். இப்போது அவர் குற்றம் செய்துவிட்டதாக அமெரிக்க ஏஜென்சி கூறியுள்ளது. இந்தியாவில் லஞ்சம் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி அதை செய்ய நினைத்தாலும், அதானியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவரால் எதுவும் செய்ய முடியாது. அதானி 2000 கோடி ஊழல் செய்துள்ளார். ஆனால் அவர் கைது செய்யப்பட மாட்டார்’’என, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டுகிறார்.விரைவில் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம் - ஹிண்டன்பர்க்

அதானி எதிர்ப்பு நிலையில் இருக்கும் ராகுல் காந்தியின் கருத்தில் இந்திய மக்களின் ஆதரவு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி எதிர்க்கட்சித் தலைவர்கள், போட்டி வணிகர்கள், அரசாங்கத்திற்கு எதிராக ருப்பவர்களும் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்கள் ‘குறுகிய கால அரசியல், பொருளாதார ஆதாயங்களுக்கான’ பேராசையில் பரந்த புவிசார் அரசியல் சூழலை புறக்கணித்து தன்னலத்துக்காக செயல்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.

இந்தியர்களின் உதவி இல்லாமல் ஹிண்டன்பர்க் ஆவணங்களை பெற சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.

‘‘ராகுலின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆளும் பா.ஜ.க., ‘‘ஒரு நாள் குற்றச்சாட்டுகளை கூறிவிட்டு, மறுநாள் மன்னிப்பு கேட்கிறார். தேச விரோதமாகப் பேசுவது ராகுல் காந்திக்கு வாடிக்கையாகி விட்டது. இந்திய பங்குச்சந்தையை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சிக்கிறார்’’ ’’என பாஜக எம்பி சம்பித் பத்ரா, என்று கூறியுள்ளார். மற்றொரு பாஜக எம்பி கங்கனா ரனாவத், இந்த நாட்டையும், அதன் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க காந்தி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

செபி தனது மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. அதானி குழுமத்திற்கு எதிரான விசாரணையில் மெத்தனம் காட்டவில்லை என்று செபி தெரிவித்துள்ளது. இதுகுறித்து செபி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘அதானி குழுமம் தொடர்பான 24 வழக்குகளில் 22 விசாரணையை செபி முடித்துவிட்டதாக ஜனவரி 3, 2024 அன்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து, மற்றொரு விசாரணை மார்ச் 2024 ல் நிறைவடைந்தது, மீதமுள்ள ஒரு விசாரணை முடிக்கப்பட உள்ளது.

இதற்கிடையில், அதானி குழுமம் ஹிண்டன்பர்க்கின் புதிய அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளை ”இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல்’ என்று தெரிவித்து இருந்தார்.
ஹிண்டன்பர்க் அறிக்கையின் நேரம் நிறைய கூறுகிறது
இந்திய பொது நிறுவனங்களை குறிவைப்பதில் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியின் உந்துதலைப் புரிந்து கொள்ள ஸ்புட்னிக் இந்தியா பல இந்திய சந்தை நிபுணர்களிடம் பேசியது. முதலீட்டு ஆலோசனை நிறுவனமான KRIS இன் நிறுவனரும் இயக்குனருமான அருண் கெஜ்ரிவால் கூறுகையில், ‘இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் ஹிண்டன்பர்க் நேரடியாக தலையிட விரும்பவில்லை என்றாலும், அவர் மீண்டும் சூழ்நிலையை கெடுக்க முயற்சிப்பதாக தெரிகிறது. அறிக்கையின் நேரம் சந்தேகத்திற்குரியது. வங்காளதேசத்தில் நடந்த நிகழ்வுகள், பார்லிமென்ட் கூட்டத் தொடர் ஒத்திவைப்பு மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடரின் முடிவிற்குப் பிறகு இது வருகிறது. இது எதிர்பாராதது என்றாலும் இது ஒரு புவிசார் அரசியல் பிரச்சினையாக இருக்கலாம். ‘ஹிண்டன்பர்க், நேரடியாக இல்லாவிட்டாலும், இதை ஒரு புவிசார் அரசியல் பிரச்சினையாக மாற்ற எரிபொருள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க முடியும்.’

ஹிண்டன்பர்க் ஒரு விதத்தில் ‘கெட்ட தந்திரங்களை அவிழ்த்து விட்டு கவனச்சிதறல்களை ஏற்படுத்தி இந்திய பங்குச் சந்தையில் அழிவை உருவாக்க முயற்சிக்கிறது. செபி தலைவர் தொடர்பாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ‘ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளன’. இந்திய பங்குகளை குறைத்து பணம் சம்பாதிப்பதே அவர்களின் உண்மையான நோக்கம்’’என்று பொருளாதார நிபுணர் அருண் கெஜ்ரிவால் கூறுகிறார்.

மேலும் அவர், ‘கடந்த முறை ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானபோது, ​​இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால், குழப்பமான சூழல் உருவாகி, பங்குச்சந்தையில் பீதி ஏற்பட்டு, அதானி குழுமம் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது. இருப்பினும், இன்று சந்தை ஆரம்பித்தபோது நாம் பார்த்தது போல், குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்திய பங்குச் சந்தையில் பீதியை பரப்பும் அவர்களின் நோக்கமே தோற்கடிக்கப்பட்டுள்ளது.

"சில்லறை முதலீட்டாளர்களுக்கு ரூபாய் 3,700 கோடி ரூபாய் இழப்பு"- வல்லுநர் குழு அறிக்கை!
File Photo

ஹிண்டன்பர்க் இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் நேரடியாக தலையிட விரும்பவில்லை என்றாலும், அவர்கள் மீண்டும் சூழ்நிலையை கெடுக்க முயற்சிக்கிறார் என்று தெரிகிறது. இது எதிர்பாராதது என்றாலும் இது ஒரு புவிசார் அரசியல் பிரச்சினையாக இருக்கலாம். ஹிண்டன்பர்க், நேரடியாக இல்லாவிட்டாலும், இதை ஒரு புவிசார் அரசியல் பிரச்சினையாக மாற்ற முயற்சிக்கிறது’’ என்கிறார் அவர்.

ஹிண்டன்பர்க் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
எவ்வாறாயினும், செபியைத் தாக்கியதால் இந்தியா ஹிண்டன்பர்க்கை விட்டுவிடக் கூடாது. ஹிண்டன்பர்க்கின் நற்சான்றிதழ்கள், அதை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றிய தகவலை செபி பெறவேண்டும். ஹிண்டன்பர்க் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார்.

இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் எல்ஐசி ஆகிய நிறுவனங்களை சீர்குலைப்பதும் அமெரிக்க சதித் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என்றும் ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தெரியாமல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருப்பது, யானை தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கொண்டதற்கு சமம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

MUST READ