Homeசெய்திகள்அரசியல்தமிழக அரசியலில் புதிய திருப்பம் – தவெகவிற்கு சிபிஎம் ஆதரவு…

தமிழக அரசியலில் புதிய திருப்பம் – தவெகவிற்கு சிபிஎம் ஆதரவு…

-

- Advertisement -

தமிழகத்தில் ஆட்சியமைப்பு தொடர்பான அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், சி.பி.எம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தவெக கட்சிக்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக அரசியலில் புதிய திருப்பம் – தவெகவிற்கு சிபிஎம் ஆதரவு…

சென்னையில் இன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆட்சியமைப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

we-r-hiring

இந்த ஆலோசனையின் முடிவில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கருத்தில் செயற்குழு ஒருமித்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் இந்த நிலைப்பாட்டிற்கு முறையான ஒப்புதல் பெற சிபிஎம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலக்குழுவிலும் இதற்கு ஆதரவு கிடைக்கும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

செயற்குழு கூட்டம் நிறைவடைந்த பிறகு, சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கட்சியின் உள்கட்டமைப்பு ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தமிழக அரசியலில் ஆட்சியமைப்பைச் சுற்றியுள்ள கூட்டணி நகர்வுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், சிபிஎம் எடுத்துள்ளதாக கூறப்படும் இந்த ஆதரவு நிலைப்பாடு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காதது தவறு – எம்.ஏ.பேபி விமர்சனம்

MUST READ