spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அதிமுக கொடி, பெயரை ஓபிஎஸ் பயன்படுத்துவது சரியல்ல- ஜெயக்குமார்

அதிமுக கொடி, பெயரை ஓபிஎஸ் பயன்படுத்துவது சரியல்ல- ஜெயக்குமார்

-

- Advertisement -

அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியின் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் என முக்கிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

we-r-hiring

அப்போது, சட்டமன்றத் தேர்தலை போல நாடாளுமன்றத் தேர்தலையும் உங்கள் தலைமையில் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என எடப்பாடி பழனிசாமியிடம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டாக வலியுறுத்தினர். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டப் போராட்டங்களை குறித்து கவலைக் கொள்ளாமல், கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துங்கள் . தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிரிளிகளை வீழ்த்துவது உறுதி. வாக்குறுதிகள் தவறியது உட்பட ஆளும் கட்சியின் குறைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளையும் உடனே தொடங்குக என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை இல்லை.ஓ பன்னீர்செல்வம், சசிகலா டிடிவி தினகரன் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. ஓபிஎஸ் அளித்துள்ள வக்கீல் நோட்டீஸ் எந்த வகையிலும் எடுபடப் போவதில்லை, ஆதனால் எந்த தாக்கமும் இருக்காது. அதிமுக கொடி, பெயரை ஓபிஎஸ் பயன்படுத்துவது சரியல்ல, ஓபிஎஸ் கூட்டியது மாவட்ட செயலாளர்கள் கூட்டமே கிடையாது. அதிமுக தலைமை கூட்டணியில் தான் நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அதில் எந்த சந்தேகமும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் இணைந்து வந்தால் மிகவும் நல்லது, தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு இது சரியான நேரமில்லை. தொகுதி பங்கீடுகள் அனைத்தும் அதிமுக தலைமை முடிவு செய்வது தான்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

MUST READ