Homeசெய்திகள்அரசியல்பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை- கே.பி.முனுசாமி

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை- கே.பி.முனுசாமி

-

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை- கே.பி.முனுசாமி

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Image

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, “பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை, பாஜக கூட்டணியில் நேரம் வரும்போது அதிமுக சேர்ந்துவிடும் என்பது கவனத்தை திசைதிருப்பும் செயல். உண்மைக்கு மாறான விமர்சனங்களை அண்ணாமலை வைத்ததாகேயே கூட்டணி முறிந்தது. 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து கூட்டணி முறிவை அறிவித்தோம்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைப்போம். அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக கூறுவது நடக்காது. பாஜக தேசிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினாலும் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி வைக்கமாட்டோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இருக்காது” என்றார்.

MUST READ