spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்மீண்டும் பாஜகவுடன் ஒட்டிக்கொண்ட அதிமுக! நிர்மலா சீதாரமனுடன் எம்எல்ஏக்கள் சந்திப்பு

மீண்டும் பாஜகவுடன் ஒட்டிக்கொண்ட அதிமுக! நிர்மலா சீதாரமனுடன் எம்எல்ஏக்கள் சந்திப்பு

-

- Advertisement -

மீண்டும் பாஜகவுடன் ஒட்டிக்கொண்ட அதிமுக! நிர்மலா சீதாரமனுடன் எம்எல்ஏக்கள் சந்திப்பு

கோவையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Nirmala

கோவையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே. செல்வராஜ், வரதராஜ் ஜெயராமன் ஆகியோர் சந்தித்து உரையாற்றினார். பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் சந்திப்பின்போது உடனிருந்தார். முன்னதாக கோவை கொடிசியா வளாகத்தில் வங்கிகள் சார்பில் மாபெரும் கடன் வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது. இதில் ஒரே மேடையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், எம்எல்ஏ வானதி சீனிவாசனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இத்திட்டட்தின்கீழ் 36 வங்கிகளில் மத்திய அரசின் 12 திட்டங்கள் வழியாக ரூ.3,749 கோடி கடன் வழங்கபடுகிறது. இதனால் விவசாயிகள், சிறுகுறு தொழில்முனைவோர், சொந்த வீடு வாங்குவோர், சொந்த வாகனம் வாங்குவோர், மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

we-r-hiring

annamalai meets edappadi palanisamy

தமிழக முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய நிலையில், பாஜககூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அத்துடன், 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக உடன் கூட்டணி இல்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சித் தலைமைத் தெரிவித்திருந்தது. இந்த சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ