நான் சாதி அரசியல் பார்க்கவில்லை; கவுண்டரை முதல்வராக்கினேன்- சசிகலா
சாதி அடிப்படையில் நான் செயல்பட்டதில்லை என சசிகலா பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “ஓபிஎஸ் சந்திக்க நேரம் கேட்டால் நிச்சயம் சந்திப்பேன். ஓபிஎஸ் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் கலந்துகொள்வது குறித்து முடிவு செய்வேன். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அதிமுகவை ஒன்றிணைக்கும் பணி முடியும். கொடநாடு வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைவருக்கும் பொதுவாக நான் செயல்பட்டு வருகிறேன், அதிமுகவில் நான் சாதியை பார்க்கவில்லை. சாதி அடிப்படையில் நான் செயல்பட்டிருந்தால் வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை முதல்வராக்கியிருப்பேனா? கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியிருப்பேனா? அதிமுகவில் அனைவரும் ஒன்று சேரக் கூடாது என திமுக செயல்பட்டுவருகிறது. கோடநாடு வழக்கை அரசியலுக்காக திமுக பயன்படுத்தி வருகிறது.
இந்த வழக்கு இப்போதைக்கு முடியாது. எதிர்க்கட்சியினர் பிரச்சினைகளை சரியான நேரத்தில் எடுத்து சொல்லாமல் உள்ளனர். அதிமுக சரிவர செயல்படவில்லை. சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்திருக்க கூடாது. அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது நோக்கம்