spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ஜூன் 13ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

ஜூன் 13ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

-

- Advertisement -

ஜூன் 13ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜூன் 13 ஆம் தேதி நடைபெறும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் வரும் 13.6.2023 அன்று செவ்வாய் கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

eps

we-r-hiring

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கைக்கோர்த்துள்ள சூழலில், தற்போது நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக அதிமுகவை மீட்கவே ஒன்றிணைந்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்து இருந்தார். மேலும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் விருப்பம் என ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ