spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்நடிகர் சந்தான பாரதியை அமித்ஷா-வாக்கிய சங்கிகள்… சந்தி சிரிக்கும் அறிவு..!

நடிகர் சந்தான பாரதியை அமித்ஷா-வாக்கிய சங்கிகள்… சந்தி சிரிக்கும் அறிவு..!

-

- Advertisement -

இன்று ராணிப்பேட்டைக்கு வந்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அமித் ஷாவுக்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் புகைப்படத்தை பயன்படுத்தி வரவேற்பு போஸ்டர் அடித்து பாஜகவினர் வரவேற்றுள்ளனர். அந்தப்போஸ்டரில் ”ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகைதரும் இன்ந்தியாவின் இரும்பு மனிதரே! வாழும் வரலாறே.. வருக.. வருக..!” என போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

அதிலும் குறிப்பாக இந்த போஸ்டரை அடித்தது சாதாரண பாஜக தொண்டனோ, ஆதரவாளரோ இல்லை. மாநில செயற்குழு உறுப்பினரான அருள்மொழி என்பவர் இந்த போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளார்.

we-r-hiring

இதேபோன்று முன்பு 12.4.2024 அன்று அமித் ஷா தமிழகம் வந்தபோது, ”மீண்டும் மோடி வேண்டும் மோடி. தமிழகம் வருகைதரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே வருக வருக” என நடிகர் சந்தான பாரதியின் புகைப்படத்தை பயன்படுத்தி போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தனர். அப்போதே இது கேலிக்குள்ளாகியது.

இந்தப்போஸ்டரை பகிர்ந்து பலரும் ‘அமித் ஷாவுக்கும், நடிகர் சந்தான பாரதிக்கும் வித்தியாசம் தெரியாத இவர்களை எல்லாம் கட்சியில் வைத்துக் கொண்டு என்ன செய்ய? என கலாய்த்து வருகின்றனர்.

MUST READ