Homeசெய்திகள்அரசியல்முதல்வர் ஆற்றிவரும் பணிக்காக பாராட்டு - சிந்தனை செல்வன்

முதல்வர் ஆற்றிவரும் பணிக்காக பாராட்டு – சிந்தனை செல்வன்

-

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனை செல்வன் பேட்டி

வைக்கம் போராட்டத்தின் நூறாண்டு நிறைவை ஒட்டி அந்தப் போராட்ட வரலாற்றை தமிழ்நாடு முழுவதும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் கொண்டாடப்படும் என்று 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார் இந்த அறிவிப்பை விசிக சார்பில் நெஞ்சாரப் பாராட்டி வரவேற்கிறோம்.

முதல்வர் ஆற்றிவரும் பணிக்காக பாராட்டு - சிந்தனை செல்வன்

வைக்கம் போராட்டம் என்பது இடைநிலை சமூகத்தைச் சார்ந்த மெத்த படித்த வழக்கறிஞர்கள் கூட தீண்டப்படாமல் ஒதுக்கப்படுகிற நிலையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் சனாதனம் கடைபிடிக்கப்பட்டது, அதை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் போராட்டம்.

சமூகநீதி கருத்தியல் போராட்ட வரலாற்றை இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் நடவடிக்கை பாராட்டக் கூடியது. வைக்கம் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், தோள்சீலை போராட்ட வரலாற்று அனுபவங்களையும் இளைய தலைமையிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் பல்வேறு சீர்திருத்தங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

வேளாண்மை பணிகளை சிறப்பான முறையில் செய்வதற்கு அந்தத் திட்டத்தில் உரிய கூறுகள் இணைக்கப்பட வேண்டும், பள்ளிக்கூட வளாகங்கள், அரசு பொதுமனை வளாகங்கள் உள்ளிட்ட அரசு பராமரிக்க வேண்டிய பல வளாகங்களை பராமரிப்பதற்கு ஆட்கள் இல்லாத நிலை உள்ளது.

முதல்வர் ஆற்றிவரும் பணிக்காக பாராட்டு - சிந்தனை செல்வன்

ஆகவே 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள மனித உழைப்பை இதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வருவாய் பஞ்சாயத்திலும் ஒரு பொது எரி தகன மேடை அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

கடந்த ஆளுநர் உரையின் போது விடுதலை சிறுத்தைகளின் கட்சி சார்பில் கிராமப்புறத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்குகின்ற 3000 ரூபாய் ஊதியத்தை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம்.

தற்போது அந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக 5000 ரூபாயாக உயர்த்தி இருப்பதற்கு விசிக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.

முதல்வர் ஆற்றிவரும் பணிக்காக பாராட்டு - சிந்தனை செல்வன்

சென்னை திரையரங்கில் குருவிக்கார சமூகத்தை சேர்ந்தவர் படம் பார்க்க உள்ளே சென்றதைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். இது போன்ற தீண்டாமை கொடுமைகள் ஆங்காங்கே நடைபெறுவதை தமிழ்நாடு அரசு கண்காணித்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சிந்தனை செல்வன் கூறினார்.

MUST READ