Homeசெய்திகள்அரசியல்கோவையில் மகனுக்காக ஆர்பாட்டம் செய்ய முயன்ற அர்ஜுன் சம்பத் கைது - ஓட்டம் பிடித்த தொண்டர்

கோவையில் மகனுக்காக ஆர்பாட்டம் செய்ய முயன்ற அர்ஜுன் சம்பத் கைது – ஓட்டம் பிடித்த தொண்டர்

-

- Advertisement -

கோவையில் மகனுக்காக ஆர்பாட்டம் செய்ய முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார் . அப்போது அவருடைய அமைப்பை தொண்டர் ஒருவர் கைது நடவடிக்கைக்கு பயந்து ஓட்டம் பிடித்தார்.

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனும் இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான ஓம்கார் பாலாஜி மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் மீது வன்மமான முறையில் பேசியிதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்திருந்தார். அதற்கு போலீசார் அனுமதி தரவில்லை.

காவல்துறை அனுமதி தராத நிலையில் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கூடினார்கள்.போலீசார் முன்னெச்சரிக்கையாக குவிக்கப்பட்டு இருந்த நிலையில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்த வந்தவர்களை தொடர்ந்து கைது செய்தனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து ஆணையர் அலுவலகம் வழியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி நடந்து வந்த அர்ஜூன் சம்பத்தை போலீசார் மதித்தனர். இந்த நிலையில் அர்ஜுன் சம்பத் சாலையில் படுத்து தர்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.முன்னெச்சரிக்கையாக குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அர்ஜுன் சம்பத்தை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

கோவையில் போலிசார் அனுமதியின்றி இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்பாட்டத்தில் பங்கேற்ற வாலிபர், போலிசார் கைது செய்யும்போது பயந்து ஓட்டம் பிடித்தார்.

ஓம்கார் பாலாஜியின் கைதை கண்டித்து கோவையில் இந்து மக்கள் கட்சி தரப்பில் போலீசார் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அர்ஜுன் சம்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைம் கைது செய்தனர். அதில் வாலிபர் ஒருவர் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து சாலையில் ஓட்டம் பிடித்த சம்பவம் சிரிப்பை வரவழைத்தது.

MUST READ