spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்‘ஏற்ப்பு’ அல்ல ஏற்பு- திமுக எம்பிக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த பாஜக

‘ஏற்ப்பு’ அல்ல ஏற்பு- திமுக எம்பிக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த பாஜக

-

- Advertisement -

உதயநிதி ஸ்டாலின் எனும் நான் என்று அமைச்சராக உறுதி மொழி ஏற்று கொண்டவர் ஒன்றிய அரசின் சார்பாக என்று எந்த இடத்திலும் கூறாமல் இந்தி அரசு என்று உறுதி மொழி ஏற்று கொண்டது ஏன்? ஓ!! அப்படி குறிப்பிட்டிருந்தால் அமைச்சராகியிருக்க முடியாது அல்லது தகுதி இழக்க நேரிடும் என தெரியுமா? என பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

narayanan thirupathy

we-r-hiring

இதற்கு ட்விட்டரிலேயே பதில் அளித்த செந்தில்குமார் எம்பி, “பாஜக வில் யாருக்குமே அறிவு இருக்காதா? சரி மூன்றாம் வகுப்பு class எடுப்போம். நாட்டின் பெயர்-இந்தியா, மாநிலத்தின் பெயர்-தமிழ் நாடு, Union Govt ஒன்றிய அரசு, State Govt-மாநில அரசு. Mr.நாராயணா நாட்டின் பெயரால் தான் பதவி ஏற்ப்பு. புறியுதோ….சரி, இப்போ திரும்ப சொல்லுங்க பார்க்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மீண்டும் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நாராயணன் திருப்பதி, ”’ஏற்ப்பு’ அல்ல ஏற்பு!’புறியுதோ’ அல்ல புரியுதோ! என்ன செய்வது!! ஆங்கிலேய அடிவருடிகள், ‘Google Translate’ மூலம் தமிழ் கற்று கொண்டால் தமிழ் அறிவு வளராது தான்.மீண்டும் ஒன்றாம் வகுப்பு முதல் படித்து விட்டு வரவும்.Union என்றால் என்ன? State என்றால் என்னவென்று கற்றுத் தருகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

MUST READ