Homeசெய்திகள்அரசியல்மாநிலத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்க பாஜகவை அகற்ற வேண்டும் - சஞ்சய் ராவாத்

மாநிலத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்க பாஜகவை அகற்ற வேண்டும் – சஞ்சய் ராவாத்

-

- Advertisement -

பிரதமர் மோடி எப்போதெல்லாம்  மகாராஷ்டிரா மாநிலம் வருகிறாரோ அப்போதெல்லாம் பாதுகாப்பற்ற சூழல் மாநிலத்தில் உருவாகி வன்முறை ஏற்படுவதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவாத் குற்றம்சாட்டியுள்ளார்!

மாநிலத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்க பாஜகவை அகற்ற வேண்டும் - சஞ்சய் ராவாத்

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சமீபத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அனைவரும் ஒன்றிணைந்து இருந்தால் பாதுகாப்போடு இருக்கலாம் என பேசுகின்றார். சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் , மகாராஷ்டிரா மாநிலம் எப்போதும் பாதுகாப்பான மாநிலமாக உள்ளதாகவும், பிரதமர் மோடி எப்போதெல்லாம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வருகிறாரோ! அப்போதெல்லாம் மாநிலத்தில் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவதோடு பிரதமர் மோடி பிரிவினையை உருவாக்கி கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்றால் ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்ற வேண்டும் என சஞ்சய் ராவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் மதரீதியிலான இட ஒதுக்கீட்டை கொண்டு வர முடியாது – ராகுல் காந்தியை எச்சரித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா

MUST READ