தெலுங்கு அரசியலும், சினிமாவும் எப்பொழுதும் செம ஸ்பைசியாதான் மசாலாத்தனமாகத்தான் இருக்கும். பாஜக ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கானா ‘காங்கிரஸ்’முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கட்சி தாண்டி நெருக்கம் காட்டி வருவது பலருக்கும் வியப்பதை தருகிறது.
ஆந்திரா, தெலங்கான ஆகிய தெலுங்கு மாநிலங்களின் முதல்வர்களான சந்திரபாபு நாயுடுவும், ரேவந்த் ரெட்டியும் பிரிவினைக்குப் பிந்தைய பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்காக, சமீபத்தில் இரண்டு முறை சந்தித்துப் பேசினர்.

இன்னும் சில தினங்களில் இந்த இரு முதல்வர்களும் ஒன்று சேருவதற்கான களம் தற்போது தயாராகி வருகிறது. இருப்பினும், இது இருதரப்பு சந்திப்பாக மட்டுமே இருக்காது. மாறாக, தனிப்பட்ட முறையில் உத்தியோகபூர்வ பயணமாக இருக்கும்.
தகவலின்படி, டாவோஸில் உள்ள புகழ்பெற்ற உலக பொருளாதார மன்ற உச்சி மாநாடு ஜனவரி 20 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதில் தெலுங்கு முதல்வர்களான அவர்கள் கலந்துகொள்வார்கள்.
சந்திரபாபு நாயுடு இந்த உச்சி மாநாட்டிற்காக டாவோஸ் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆந்திர முதல்வராக பதவியேற்ற அவர் இரண்டாவது முறையாக மேற்கொள்ளும் முதல் டாவோஸ் பயணம் இதுவாகும். அவருடன் ஐடி அமைச்சர் நாரா லோகேஷும் வருவார் என்று தெரிகிறது.
ரேவந்த் ரெட்டியைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு இந்த உச்சிமாநாட்டிற்குச் சென்ற அவர், இந்த ஆண்டும் தொடர்கிறார். இரண்டு தெலுங்கு முதல்வர்களும் ஒரே நேரத்தில் டாவோஸில் இருப்பார்கள் என்பதால், தெலுங்கு மாநில அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்க அவர்கள் இங்கு சந்திப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
தெலுங்கு முதல்வர்களுடன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் இந்த உலகப் புகழ்பெற்ற உச்சிமாநாட்டிற்காக டாவோஸ் செல்கிறார்.


