spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்மோடி அவர்களே… தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லையா..? முதல்வர் ஸ்டாலின் விரக்தி..!

மோடி அவர்களே… தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லையா..? முதல்வர் ஸ்டாலின் விரக்தி..!

-

- Advertisement -

”நிதி வழங்கும் விவகாரங்களில் ஒன்றிய அரசு அழுத்தம் தருவது கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயல்” என மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில், ”மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களே… தேசிய கல்வி கொள்கை-2020-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் எங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான நிதி ஒதுக்கப்படும் என்பது எவ்விதத்தில் நியாயம்?

we-r-hiring

Modi mk stalin

இருவேறு திட்டங்களுக்கு முடிச்சுப் போட்டு கல்விக்கான நிதியை முடக்குவது அறமா? இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும்.

மாண்புமிகு ஒன்றியக் கல்வித் துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் தமிழ்நாட்டில் பெருத்த கவலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுவதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது.அலுவல் மொழிகள் விதி, 1976-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ‘அலுவல் மொழிச் சட்டம், 1963’-ஐச் செயல்படுத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நவோதயா, வித்யாலயா போன்ற ஒன்றிய அரசுப் பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதால்தான், தமிழ்நாட்டில் அவை நிறுவப்படவில்லை. ஒன்றிய அரசின் இரண்டு வெவ்வேறு திட்டங்களான ‘சமக்ர சிக்ஷா” திட்டத்தையும், தேசிய கல்விக் கொள்கையைப் பிரதிபலிக்கும் பி.எம்.ஸ்ரீ. திட்டத்தையும் ஒன்றாகப் பொருத்திப் பார்ப்பது என்பது அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாதது."தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநிலத்தைக் கட்டாயப்படுத்துவதற்கு, நிதி வழங்கும் விவகாரங்களில் ஒன்றிய அரசு அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி, கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்.நிதி விடுவிக்கப்படாததால் பல முக்கியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வருந்தத்தக்க சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய கல்வி கொள்கை 2020-ஐ செயல்படுத்துவதோடு ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தைப் பொருத்திப் பார்க்காமல், 2024-25 ஆம் நிதியாண்டில் இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

MUST READ