ப்ரீத் விஹாரில் கிருஷ்ணா நகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் தொண்டர்களிடம் பேசியதாவது , வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என, டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
பூத் அளவில் கட்சியை வலுப்படுத்தவும், மாநிலத்தில் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவும் தொகுதி மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த கூட்டங்கள் கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது எனவும் வர இருக்கும் டில்லி சட்டசபை தேர்தலில் கட்சி சிறப்பாக செயல்படும். தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் புது உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரசின் ஓட்டு சதவீதம் கணிசமாக உயர்ந்தது. மக்கள் மாற்றத்தை எதிர்பாத்து இருக்கிறார்கள். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு இது ஒரு தெளிவான அறிகுறி.
ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது மக்களவை தேர்தலுக்கு என மட்டுமே. எனவே, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என கூறியுள்ளார்.
ஆட்சியில் உள்ள அரசு தங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக சாக்குப்போக்கு கூறிவருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் டிஸ்காம்கள் மின் கட்டணத்தை ஏறக்குறைய 9 சதவீதம் உயர்த்தியதற்காக டில்லி அரசுக்கு எதிராக அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் என தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.