Homeசெய்திகள்அரசியல்"டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த"- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

-

 

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிருபிப்போம் - அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..
File Photo

தமிழகத்தின் பரவும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

இது தொடர்பாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், சுமார் இரண்டு மாதங்களில் 5,000- க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தி, காய்ச்சல் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும், இனியாவது தமிழக அரசும், சுகாதாரத்துறையும் விழித்துக் கொண்டு உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் எனவும், தான் கடந்த ஜூலை மாதமும், செப்டம்பர் மாதமும் அறிக்கை வெளியிட்டு, வலியுறுத்தியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் உதவியாளர் மீது அமலாக்கத்துறை புகார்!

ஆனால், தமிழக அரசும், சுகாதாரத்துறையும் பெயரளவிற்கு காய்ச்சல் முகாம்களை நடத்திவிட்டு, மாரத்தான் போட்டிகளை நடத்துவதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் சென்றுவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், மதுரையில் 13 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புதுக்கோட்டையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 229 சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, இனியும் காலம் தாழ்த்தாமல் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, தொடர்ந்து மருத்துவ முகாம்களை நடத்திப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

MUST READ