Homeசெய்திகள்அரசியல்'அந்த 4 லட்சம் வாக்குகள்..! மீண்டும் திமுகதான் ஆட்சி அமைக்கும்...' அடித்துச் சொல்லும் எஸ்.வி.சேகர்..!

‘அந்த 4 லட்சம் வாக்குகள்..! மீண்டும் திமுகதான் ஆட்சி அமைக்கும்…’ அடித்துச் சொல்லும் எஸ்.வி.சேகர்..!

-

- Advertisement -

நாடகப்பிரியா குழுவின் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு ”எலோருக்குமான முதல்வர்” என நடிகர் எஸ்.வி.சேகர் புகழாரம் சேர்த்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர், ” வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தலில் பிரச்சாரம் செய்வேன். எனக்கு 75 வயசு ஆச்சு.என்ன வச்சி ஒரு கட்சி என்ன பண்ணும். என் பையனுக்கு 40 வயசாயிடுச்சு.அவனை எடுத்துக்கட்டும்.

நானும் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். இதுவரைக்கும் தமிழகத்தில் ஓட்டே போடாத ஒரு 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். அதில் ஒரு மூன்று லட்சம் பேரை ஓட்டு போடுவதற்கான வழிமுறைகளை எல்லாம் நான் மு.க.ஸ்டாலினிடம் கூறி இருக்கிறேன். அது நடந்தது என்றால் நான் கண்டிப்பாக திமுகவுக்கு பிரச்சாரம் செய்வேன்.தமிழ்நாட்டில் பட்டன் போன் கூட இல்லாமல் எத்தனையோ பிராமணர்கள் 10 லட்சம் பேருக்கு மேல் இருக்கிறார்கள்.

s.v.sekar

பிணம் சுமப்பவர்கள்,டேபிள் கிளீன் பண்ணுபவர்கள், சமையல் வேலை செய்கிறவர்கள் புரோகிதர் வேலை செய்பவர்கள் என பலபேர் இருக்கிறார்கள். அரசியலில் இப்போது இருக்கிற சூழ்நிலை நீடித்தால் மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும். நடிகர் விஜய் இன்னும் முழுதாக அரசியலுக்குள் வரவில்லை. அவர் சினிமா சூட்டிங் போல அங்கங்கே சென்று குரூப், குரூப்பா போய் பேசுகிறார். 234 தொகுதிகளிலும் அவரது கட்சி ஆட்களை நிறுத்தப்போகிறார் என்றால் புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒண்ணும் செய்ய முடியாது. அது அவருக்கே தெரியும்.

இன்னும் தேர்தல் வர ஒரு வருடம் இருக்கிறது. அவ்வளவு நாட்கள் இருக்கும்போது அவரை இப்போதே நாம் ஏன் எதையும் சொல்ல வேண்டும்? தேர்தல் என்பது கூட்டணி கணக்கு. தமிழகத்தின் வெற்றி கணக்கு என்பது ஒரு மூன்று அல்லது நான்கு லட்சம் ஓட்டுகள் தான் தீர்மானிக்கப்படுகிறது. அந்த நாலு லட்சம் ஓட்டைப் பெறுவதற்கான ஒரு சூட்சமத்தை நான் சொல்லி இருக்கிறேன். அதை இந்த திமுக அரசுக்கு நான் வாங்கி தருவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ