மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் அதே வேளையில், ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்டின் முதல்வராகி இருக்கிறார்.
இரு மாநிலங்களிலும் கடந்த முறை அவர்கள் வெற்றிபெற்றதை விட இம்முறை இன்னும் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். இரண்டு மாநிலங்களிலும் வெற்றி பெற்றதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இந்த மாநிலங்களில் பெண்கள் தொடர்பான திட்டங்கள் வெற்றியில் மிக முக்கியமான பங்காற்றியுள்ளது.

மகாராஷ்டிரா தேர்தலில் மகாயுதி வெற்றி பெறக்காரணம், பெண்களுக்கான ‘லாட்லி பஹின் யோஜனா’ திட்டம். மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ‘லாட்லி பஹின் யோஜனா’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை 1500 ரூபாயில் இருந்து 2100 ரூபாயாக உயர்த்துவதாக மகாயுதி கூட்டணி உறுதியளித்து இருந்தது.
மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் லாட்லி பஹின் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், பெண்களின் கணக்குகளில் மாதந்தோறும் ரூ.1500 பணப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதுவரை மூன்று தவணைகளாக வழங்கப்பட்டுள்ளன. தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்த பின், 2100 ரூபாயாக உயர்த்தப்படும் என, மகாயுதி அரசு வாக்குறுதி அளித்தது.
ஜார்கண்டில் ஹேமந்த் சோரன் மீண்டும் வருவதில் பெண் வாக்காளர்களும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்தது, ‘மைனிய சம்மன் நிதி யோஜனா’. பெண்களை மனதில் வைத்து ஹேமந்த் அரசு தேர்தலுக்கு முன் மைனியன் சம்மன் நிதியை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், தேர்தலுக்கு முன், பெண்களின் கணக்கில், ஆயிரக்கணக்கான ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்புக்கு சில காலம் முன்பு ஹேமந்த் சோரன், இனி மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இப்போது இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. ஹேமந்த் சோரன் வெற்றிக்கு இதுவே முக்கியக் காரணம்.
இது இந்த இரண்டு மாநிலங்களின் விஷயம் மட்டுமல்ல, கடந்த காலங்களில் இதேபோன்ற திட்டம் பல மாநிலங்களில் நடைமுறையில் இருந்தது. பஞ்சாப் தேர்தலின் போது, ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு பெண்ணின் கணக்கிலும் 1,000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தது. 1100 ஆக உயர்த்தப்படும் என இடைத்தேர்தலின் போது முதல்வர் பகவந்த் சிங் மான் வாக்குறுதி அளித்தார்.
2023ஆம் ஆண்டு பாஜக அரசு இதனைத் தொடங்கியது. ஆரம்பத்தில் ரூ.1000, பின்னர் ரூ.1250 ஆக உயர்த்தப்பட்டது. 3000 ஆக உயர்த்தப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. கர்நாடக தேர்தலிலும் காங்கிரசுக்கு இது போன்ற திட்டம் பலனளித்தது. கிரஹ லக்ஷ்மி யோஜனா தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மாநில பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் கிடைக்கும். இதேபோல், ஹரியானாவிலும், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2100 வழங்குவதாக பாஜக அறிவித்தது. திட்டம் இங்கேயும் பலனளித்தது. தமிழகத்திலும் திமுக அரசு மகளிர் உரிமைத் தொகை என்கிற பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தைக் கூறி ஆட்சியைப் பிடித்தது.