Homeசெய்திகள்அரசியல்விசிக இருக்கும் வரை 100 மோடிகள் பிறந்து வந்தாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது- திருமாவளவன்

விசிக இருக்கும் வரை 100 மோடிகள் பிறந்து வந்தாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது- திருமாவளவன்

-

- Advertisement -

”விசிக இருக்கும் வரை இன்னும் 100 மோடிகள் பிறந்து வந்தாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

இதுகுறித்து பேசிய அவர், ”சிறுத்தைகளை தாண்டி திராவிடத்தை ஒழிக்க எவனாலும் முடியாது. திருமாவளவனை தாண்டி, விடுதலை சிறுத்தைகளை தாண்டி தமிழக அரசியலில் திராவிடத்தை ஒழிக்க ஒருவனாலும் கை வைக்க முடியாது. என்னை நம்புபவர்களை உயிரை கொடுத்து தாங்கி பிடிப்பேன்.

ஒன்றிய அரசுக்கு பதிலடி… கல்விக்கான பட்ஜெட்: முதல்வரின் துணிவு - விசிக வரவேற்பு..!

எடப்பாடியை தடுமாற வைப்பது விசிகவின் நிலைப்பாடு தான்.2வது இடத்தில் நீயா.. நானா..? என எடப்பாடிக்கும் விஜய்க்கும்தான் சண்டை. சனாதன சூழ்ச்சிகளை முறியடித்து சங்கிகளை விரட்டியக்கும் மகத்தான சக்தி விசிகவிடம் உள்ளது. சனாதன சக்திகளை வேரறுப்பதிலும் வீழ்த்துவதிலும் உறுதியாக இருப்போம். விசிக இருக்கும் வரை இன்னும் 100 மோடிகள் பிறந்து வந்தாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது.

எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்தது அகில இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போதே தேர்தலுக்கான சூடு பிடித்துவிட்டது. மனம் போன போக்கில் கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும். கட்சியின் தலைவர்கள் என்ற முறையில் இதை சொல்ல வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. சட்டசபை தேர்தல் முடியும் வரை கட்சி நிர்வாகிகள் யாரும் யுடியூப் சேனலுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

தேர்தல் வரையிலும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். திமுக கூட்டணியை உடைப்பதற்கு விசிகவில் இருக்கும் பலர் கூலி வாங்கிக்கொண்டு சதி வேலை செய்கிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ