spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு

பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு

-

- Advertisement -

பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன் என பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.

காயத்ரி ரகுராம்

we-r-hiring

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜகவில் இருந்து விலகுகிறேன். இந்த முடிவை நான் எடுக்க காரணம் அண்ணாமலைதான், அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. என்னால் அவரது தலைமையின்கீழ் செயல்பட முடியாது. அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர். அண்ணாமலை மீது காவல்துறையில் புகார் அளிக்க தயாராக இருக்கிறேன். பெண்களுக்குக்கான சம உரிமை மற்றும் மரியாதை தராததால் தமிழக பாஜகவில் இருந்து விலகுகிறேன்.

பெண்களே உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள். மரியாதை இல்லாத இடத்தில் பெண்கள் தொடர்ந்து இருக்கக்கூடாது. என்னிடம் உள்ள ஆடியோ, வீடியோக்களை காவல்துறையிடம் வழங்கி அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என புகார் அளிக்கவுள்ளேன். அண்ணாமலை மலிவான , பொய் பேசும், அதர்மத்தின் பக்கம் நிற்கும் தலைவர். உண்மை தொண்டர்களுக்கு பாஜகவில் மதிப்பு இல்லை. அண்ணாமலைக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.

 

 

 

 

MUST READ