spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ஈரோடு இடைத்தேர்தலில் நீங்கள் ஏன் என்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறக்கூடாது? அண்ணாமலைக்கு காயத்ரி சவால்

ஈரோடு இடைத்தேர்தலில் நீங்கள் ஏன் என்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறக்கூடாது? அண்ணாமலைக்கு காயத்ரி சவால்

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி-4 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

we-r-hiring

இதையடுத்து அங்கு வாக்குப்பதிவு பிப்ரவரி – 27 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி- 31ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க பாஜக சார்பில் 14 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடன இயக்குநர் காயத்ரி ரகுராம், ஈரோடு கிழக்கு தொகுதியில் தனக்கு எதிராக நின்று வெற்றிப்பெற தயாரா? என அண்ணாமலைக்கு சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணாமலை நீங்கள் தமிழ்நாட்டில் மிகவும் பெரிய தலைவர். ஓப்டிக்ஸ் படி உங்களுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறலாம்.

ஈரோடு இடைத்தேர்தலில் நீங்கள் ஏன் என்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறக்கூடாது? இடைத்தேர்தலில் கூட்டணியில் உள்ளீர்களா? அல்லது தனித்து போட்டியிடுகிறீர்களா? அல்லது சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முடியுமா? இடைத்தேர்தலுக்காக குழுவை அமைத்துள்ளீர்களா? எனவே நீங்கள் போட்டியிடுகிறீர்களா இல்லையா என்பதை ஏன் அறிவிக்கக்கூடாது.. அதற்கு ஏன் ஒரு குழு?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ