தேர்தலில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் எச். ராஜா.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற எச். ராஜா அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்தான் அந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
சிவகங்கையில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ’’நான் தேர்தலில் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஆனால் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தான் போட்டியிடும்’’ என்றார் .
சிவகங்கை தொகுதியை திமுக கூட்டணியில் காங்கிரஸ் குறி வைக்கிறது. அதிமுக கூட்டணியில் அதிமுக குறி வைத்திருக்கிறது. ஆனால் எச்.ராஜாவின் ஏரியா என்பதால் அவர்தான் நிச்சயம் போட்டியிடுவார் என்பதால் , அதிமுக விட்டுக் கொடுக்க முடிவு எடுத்து இருக்கிறது என்று தகவல். ஆனால் தற்போது, தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருக்கும் எச். ராஜாவால் அதிமுகவிற்கு அந்த வாய்ப்பு போகிறதா என்றால் அதுவும் இல்லை. இந்த தொகுதியில் பாஜக தான் போட்டியிடும் என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டார் எச். ராஜா.