2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், விஜய் பேராசைப்படுவதால் கூட்டணி பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இதனை உறுதிகப்படுத்தும் விதமாக மூத்த அரசியல்வாதியான பழ.கருப்பையா முக்கியததகவலை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர், ”ஒன்று சிந்திக்க வேண்டும் விஜய். அதிகாரத்தில் பங்கு கொடுக்கிறேன் இதுவரை எந்தக் கூட்டணி கட்சிகளும் சொன்னதில்லை. எடப்பாடி பழனிசாமியிடம் விஜய் கூட்டணி பற்றி பேசும்போது, ”அதிகாரத்தில் பங்கில்லை. நாங்கள் எப்போதும்போல 170, 170 இடங்களில் போட்டியிடுவோம்.
நாங்கள் தனித்துத் தான் ஆட்சி அமைப்போம். உங்களுக்கு உரிய இடங்களைத் தருகிறோம்” என்றுதான் சொல்லி இருக்கிறார்களே தவிர, வேறு வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கவில்லை. விஜய் ரொம்ப அதிக இடங்களை கேட்டதால்தான் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இது எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டிய நண்பர்கள் சொன்னது. கையால் இது உண்மையாக இருக்கலாம் எனக் கருதுகிறேன். துணை முதல்வர் பதவி, அமைச்சர் பதவி என எதுவும் தரமுடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து விட்டார்.
அதிகாரத்தில் பகிர்வு என்பது எம்.ஜி.ர், அம்மா காலத்தில் இருந்தே பழக்கமில்லை. ஆகவே நாங்கள் நிறைய தொகுதிகளில் நிற்போம். உங்களுக்கு 30, 40 இடங்களைத் தருகிறோம். 40, 45 இடங்களை நாங்கள் கொடுத்தால் விஜயகாந்தைப்போல நீங்கள் 28 முதல் 35 இடங்களில் வெற்றி பெறலாம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆனால் விஜய் அதனை ஏற்றுக் கொள்வதாக இல்லை என்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார் பழ.கருப்பையா.