தெலுங்கர் பற்றி சர்ச்சையாகப் பேசியதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் அடைக்கப்பட்டதற்கு பலரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக முன்ஜாமீன் கோரி கஸ்தூரி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் படத் தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கியிருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பிறகு அங்கிருந்து அவரை சென்னைக்கு அழைத்து வந்து, ஒன்றரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் புழல் மகளிர் சிறையிலும் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து, கஸ்தூரி தூக்கமின்றி தவித்து வருவதாகவும், சரியாக சாப்பிட முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
“இந்த போலீஸால கஸ்தூரியைத்தான் கைது செய்ய முடியும்! செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்க முடியாது’’என்று எச்.ராஜா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், ‘‘நடிகை கஸ்தூரியின் ஜாமீன் வழக்கை கருணையோடு அணுக வேண்டும். கஸ்தூரிக்கு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உள்ளது. சிறப்புக் குழந்தையை தனி ஆளாக கஸ்தூரி போராடி வளர்த்து வருகிறார். குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு அணுக வேண்டும்’’ என சென்ன உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனின் மனைவி காமாட்சி கேட்டுக் கொண்டுள்ளார். https://x.com/palaniraja33634/status/1859077909836603866
இதற்கு எதிர்வினையாற்றி வரும் சிலர், ‘‘ஒரு உயர்நிதிமன்ற நீதிபதியின் மனைவி இப்படி பேசுவது அதிகார துஷ்பிரயோகமில்லையா? கீழ் நீதிமன்ற நீதிபதியை நேரடியாகவோ மனைமுகமாகவோ அழுத்தம்கொடுக்கும் செயல் இல்லையா?
பிராமனர் அல்லாத எத்தைனையோ குற்றவாளிகள் இந்த சூழ்நிலையில் இருக்கும்போது பார்ப்பன கஸ்தூரிக்கு மட்டும் ஆதரவு கொடுப்பது ஏன்? இதே கருணை உள்ளம் அனைத்து வழக்குகளுக்கும் பொருந்துமா? கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் பொழுது அந்த ஆட்டிசம் பாதித்த குழந்தை கண்ணுக்கு வரவில்லையா? அல்லது இது மறைமுகமாக அனுதாபம் தேடும் நிகழ்வா?’’ என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.