Homeசெய்திகள்அரசியல்மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு… 100 யூனிட் இலவச மின்சாரம் கட்… - ...

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு… 100 யூனிட் இலவச மின்சாரம் கட்… – முன்னாள் அமைச்சர் பகீர்

-

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக நாள்தோறும் பல்வேறு அறிவிப்புகள் அரசின் சார்பில் வெளியிடுவதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக அரசின் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ஆலம்பாளையம் பேரூராட்சி சார்பில் காவேரி ஆர்.எஸ். பகுதியில் மின்சாரத்துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் கவுன்சிலர்கள் மக்கள் பணியில் ஈடுபடுவதை காட்டிலும் தவறான பாதையில் செல்வதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து திமுக மக்கள் விரோத செயல்களை கண்டித்து அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்துள்ளதாகவும் மேலும் மின்கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்
முன்னாள் அமைச்சர் தங்கமணி

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்துள்ளதாகவும் மேலும் மின்கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட உள்ளனர். மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக நாள்தோறும் பல்வேறு அறிவிப்புகள் மின்துறை சார்பில் வெளியிடுவதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளதாக கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் அதிமுக ஆட்சிக்காலத்தில் விவசாயத்திற்கு மின் இணைப்புடன் மீட்டர் பொருத்தும் போது எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது எதற்காக மின் இணைப்புடன் மீட்டர் வைத்து வருகிறார்கள் என்பதை குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். திமுக தனது நிதிநிலை அறிக்கையில் மின்சார வாரியத்தின் இழப்பை ஈடு செய்வதற்காக 13,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் தற்போது எதற்காக மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளனர் என கேள்வி எழுப்பினர்.

ஒரே குடும்பத்தில் இரண்டு மின் இணைப்பு உள்ள நிலையில் ஆதார் எண் இணைக்கும் போது 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் நிலை இருப்பதால் இதற்கு நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிப்பார்கள் எனக் கூறினார். மேலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றால் குடும்ப ஆட்சி நடைபெறுவதற்கு சான்றாகும் என தெரிவித்தார்…

MUST READ