spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்விஜய் கட்சியின் சின்னம் இது தான் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் கட்சியின் சின்னம் இது தான் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

-

- Advertisement -

வருகின்ற சட்டமன்ற தோ்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கான சின்னத்தை தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.விஜய் கட்சியின் சின்னம் இது தான் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூா்வ அறிவிப்புகடந்த நவம்பா் மாதம் பொது சின்னம் கோாி ECI-ல் தமிழக வெற்றிக்கழகம் விண்ணப்பத்திருந்தது. ஆட்டோ, மோதிரம், வெற்றிக் கோப்பை, கிாிக்கெட் பேட், விசில் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை தவெக கேட்டு இருந்தது.  இதில் தவெகவின் முதன்மை விருப்பமாக விசில் சின்னம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவெக ‘விசில்’ சின்னத்தைத் தேர்ந்தெடுத்ததற்குப் பின்னால் சுவாரஸ்யமான காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் சூப்பர் ஹிட் படமான ‘பிகில்’, தெலுங்கில் ‘விசில்’ என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், அவரது சமீபத்திய படமான ‘தி கோட்’ (The GOAT) படத்தில் இடம்பெற்ற ‘சத்தம் பத்தாது விசில் போடு’ என்ற பாடல் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தச் சின்னத்தை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிக எளிதாகக் கொண்டு செல்ல முடியும் எனத் தவெக தலைமை கருதுவதாலேயே, விருப்பப் பட்டியலில் விசில் சின்னத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்த நிலையில், விஜயின் தவெகவிற்கு, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பொது சின்னமாக விசில் ஒதுக்கப்பட்டுள்ளதால், அனைத்து தொகுதிகளிலும் தவெக விசில் சின்னத்தில் போட்டியிடும்.

அதே போல் கமஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு மீண்டும் மாா்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்

 

MUST READ