அரசு ஊழியர்கள் மீதான இந்த அக்கறை அதிமுக ஆட்சியில் ஏன் இல்லை என முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளாா்.
தமிழக சட்டசபையின் 3-ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அதிமுக எம்.எல்.ஏ தங்கமணியின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,
”திமுக ஆட்சியில் 90 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. உரிமையோடு பொராடிய அரசு ஊழியர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி அவர்களது 95 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என அவர் கூறினார்.
அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்து எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி பேசியதை யாரும் மறந்துவட மாட்டார்கள் என குறிப்பிட்ட முதல்வர், அதிமுக ஆட்சியை போல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நாங்கள் இரவோடு இரவாக கைது செய்யவில்லை என திமுக அரசின் அணுகுமுறையை விளக்கினார்.
மேலும், அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால பிரச்சனைகளை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம் என்று சுட்டிக்காட்னாா். கோட்டையில் உள்ள தனது அறைக்கே வந்து அரசு ஊழியர்கள் தனக்கு இனிப்பு ஊட்டடினர் என முதலமைச்சர் தெரிவித்தாா். அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது அதிமுகவுக்கு பிடிக்கவில்லை என்று விமர்சித்தாா்.
இன்னும் சில பிரச்சனைகள் உள்ளன, போராடும் அரசு ஊழியர்களை நாங்கள் வேடிக்கை பார்க்கவில்லை. அவர்களின் எஞ்சிய கோரிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவகிறது. விரைவில் தீர்வு காணப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊறுதியளித்தாா்.
அரசு ஊழியர்களின் வாக்குகளை ஏமாற்றி பெறவில்லை என்றும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.”


