spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அதிமுகவை பற்றி பேச டி.டி.வி. தினகரனுக்கு தகுதி இல்லை - மா.பா.பாண்டியராஜன். TTV...

அதிமுகவை பற்றி பேச டி.டி.வி. தினகரனுக்கு தகுதி இல்லை – மா.பா.பாண்டியராஜன். TTV Dinakaran has no rights to speak about AIADMK party – Ma Foi K. Pandiarajan.

-

- Advertisement -

புலியை சீண்டிப் பார்க்கிறார் டிடிவி… அதிமுகவிலிருந்து வெளியே சென்று தனி கட்சி தொடங்கிய டிடிவி தினகரன் அதிமுகவை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் குற்றச்சாட்டு.

சென்னை திருவொற்றியூரில் சர்வதேச மழலையர் பள்ளி திறப்பு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கலந்து கொண்டார். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் குழந்தைகள் அனைவரும் செல்போன் மோகத்தில் மூழ்கிக் கிடப்பதை மாற்றும் வகையில் பள்ளியில் குழந்தைகளின் அறிவுத்திறனையும் செயல் திறனையும் வளர்க்கும் விதத்தில் புதிய வடிவிலான நவீன விளையாட்டு உபகரணங்கள் துவங்கி வைத்தார்.

we-r-hiring

அதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மா.பா.பாண்டியராஜன், தேவையில்லாமல் இந்த நேரத்தில் புலியை சீண்டுவது போல் டிடிவி தினகரன் பேசி வருகிறார். அதிமுக எடப்பாடியார் தலைமையில் எழுச்சியுடன் வீறு கொண்டு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இது அவருக்கு நன்றாக தெரியும். சில காரணங்களால் அதிமுக தலைவர்கள் பிரிந்து இருக்கிற நேரத்தில் அதை பற்றி தேவையில்லாத கருத்தை பதிவு செய்யும் முயற்சியில் டி.டி.வி. செயல்பட்டு வருகிறார் என்று தெரிவித்தார்.

மக்களுக்கு தெரியும் 99 சதவீதம் அதிமுக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறது என்று கூறினார். எந்த கட்சியா இருந்தாலும் 75 மாவட்டங்களில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் செய்திருக்கிறதா என்பதை டிடிவி தினகரனிடம் கேட்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வளர்த்தக் கட்சி அதிமுக. முழுமையாக எடப்பாடி பழனிசாமி பின்னால் நிற்கிறது என்பது டி.டி.வி. தினகரனுக்கு தெரியும் என்று கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமி தனியா கட்சி தொடங்க வாய்ப்பு கிடையாது. அதனை அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் இதைப் பற்றி பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் மாதவரம் மூர்த்தி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் குப்பன், மாமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

MUST READ