Homeசெய்திகள்அரசியல்மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம் புனரமைப்பு - மு.க.ஸ்டாலின்

மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம் புனரமைப்பு – மு.க.ஸ்டாலின்

-

வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக புனரமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தன் கவிகளால் விடுதலை வேட்கை செய்த மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டிற்கு கவிதைகள் மூலம் பாரதியார் ஆற்றிய தொண்டை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு மரியாதை செலுத்தப்படும். இந்நிலையில், உத்திரபிரதேசம் வாராணாசியில் பாரதியார் வாழ்ந்த இல்லம் புனரமைத்து நினைவில்லமாக மாற்றப்படும் என, சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதையொட்டி, 18 லட்சம் செலவில் வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தை புனரமைப்பு செய்து, நினைவு இல்லமாகவும் அதில் பாரதியார் மார்பளவுச் சிலையினையும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வழியாக பாரதியார் நினைவு இல்லம் மற்றும் சிலையை திறந்து வைத்தார். பின்னர் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரையும் வெளியிட்டார். வாராணாசி பாரதியார் இல்லம் பராமரிப்பு செலவையும் அரசே ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, மெரினாவில் உள்ள பாரதியார் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் கமார் ஆகியோர் பாரதியார்உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

MUST READ