Homeசெய்திகள்அரசியல்மகாராஷ்டிரா தேர்தல் முடிவு; முதலமைச்சர் தேர்வில் பெரும் குழப்பம்

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு; முதலமைச்சர் தேர்வில் பெரும் குழப்பம்

-

- Advertisement -
kadalkanni

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. அதற்குள் பாஜக கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சி கூட்டணியிலும் முதலமைச்சர் யார் என்ற குழப்பம் ஆரம்பம் ஆகியுள்ளது.மகாராஷ்டிரா தேர்தல் முடிவு; முதலமைச்சர் தேர்வில் பெரும் குழப்பம்

கடந்த 2019இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி அமோகமாக வெற்றிப் பெற்றது. பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அதிருப்தி அடைந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாஜக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்தார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவில் உத்தவ் தாக்கரே முதலமைச்சரானார்.அதன்பின்னர் சிவசேனா கட்சியை உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக ஆதரவோடு ஆட்சி அமைத்தனர். அது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

தற்போது 2024ல் பாஜக கூட்டணியில் தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகிய மூன்று பேரும் முதலமைச்சர் வேட்பாளர் களத்தில் உள்ளனர். பாஜக கூட்டணி வெற்றிப் பெற்றால் தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மீண்டும் அவரே பதவியில் நீடிக்க விரும்புவார். அதை தேவேந்திர பட்னாவிஸ் ஏற்றுக் கொள்வாரா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. அந்த கூட்டணி உடைவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் பாஜக கூட்டணியில் குழப்பங்கள் ஆரம்பித்துள்ளது.அதேபோன்று காங்கிரஸ் தலைமையிலான மகாவிகாஸ் கூட்டணியில் உத்தவ் தாக்கரேவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்ந்த் பாட்டீலும் முதல்வர் பதவிக்கு போட்டியில் உள்ளனர்.

288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் தற்போது பாஜக கூட்டணி 147 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 128 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மற்றவை 11 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தேர்தலில் வெற்றி வாய்ப்பை என்பதை கடந்து முதல்வரை தேர்ந்தெடுப்பதில் பிரச்சினை பெரிதாகி வருகிறது.

அதிமுக கூட்டணியை வெறுக்கும் பிரேமலதா… அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி

MUST READ