spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அதிமுக கூட்டணியை வெறுக்கும் பிரேமலதா... அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி

அதிமுக கூட்டணியை வெறுக்கும் பிரேமலதா… அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி

-

- Advertisement -

அதிமுக சீனியர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய பேச்சால், அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வரும் சிறிய கட்சிகளும், தற்போது யோசிக்க ஆரம்பித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகள் ரூ.50 கோடி, ரூ.100 கோடி கேட்கிறார்கள் என அவர் ஓபனாக பேசியிருக்கிறார். இது அ.தி.மு.கவுடன் கூட்டணிக்கு போகலாமா? அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பணம் வாங்கிக்கொண்டோம் என நமது கட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படும் என யோசிக்க ஆரம்பித்துவிட்டார்களாம். ஏற்கனவே, திருமாவளவன், விஜய், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்காக காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே பேச்சில் வேட்டு வைத்துவிட்டார் திண்டுக்கல் சீனிவாசன்.

we-r-hiring

ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் இருக்கும் தே-மு.தி.கவும் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சை ரசிக்கவில்லையாம். ‘நாங்கள் உங்களிடம் கோடிகளை வாங்கிக்கொண்டுதான் கூட்டணியில் இருக்கிறோம் என எங்களது கட்சி நிர்வாகிகளே தவறாக நினைக்கமாட்டார்களா!’ என தே.மு.தி.க. தலைமை கேள்வி எழுப்பியிருக்கிறதாம்.

தவிர, தே.மு.தி.கவும், தவ.க.வும் கைகோர்க்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். காரணம், மறைந்த விஜயகாந்த் மீது அதீத அன்பையும், நன்மதிப்பையும் வைத்திருப்பவர் நடிகர் விஜய். அந்த வகையில் இருவரும் கைகோர்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தவிர மற்ற கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணிக்கு வர யோசிக்க ஆரம்பித்துவிட்டன” என்கின்றனர்.

MUST READ