spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா..! அமித்ஷாவை சந்தித்த உடன் அதிரடி

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா..! அமித்ஷாவை சந்தித்த உடன் அதிரடி

-

- Advertisement -

மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் ராஜினாமா செய்தார், இன்று அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டாவை சந்தித்தார்.

மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் இன்று மாலை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக, இன்று அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தார். டெல்லியில் இருந்து திரும்பிய மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங், ஆளுநரைச் சந்திக்க ராஜ்பவனை அடைந்தார். அப்போது அவருடன், பாஜக எம்பி சம்பித் பத்ரா மற்றும் பல மாநில அமைச்சர்களும் அவருடன் இருந்தனர்.

we-r-hiring

கடந்த ஆண்டு, மணிப்பூர் வன்முறைக்காக பீரன் சிங் மணிப்பூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டார். இந்த வருடம் முழுவதும் மிகவும் மோசமாக இருந்தது என்று அவர் கூறினார். இதுவரை நடந்தவற்றிற்காக நான் மாநில மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தனர். பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதனுடன், 2025 ஆம் ஆண்டில் மாநிலத்தில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நம்புகிறேன் என்று அவர் எழுதியிருந்தார்.

MUST READ