‘நான் பாகிஸ்தானில் வசிப்பது போல் தெரிகிறது’ என ஆம் ஆத்மி எம்எல்ஏ தேவிந்தர்ஜீத் சிங் பஞ்சாப் மான் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இத்தனைக்கும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியே அங்கு நடக்கிறது.
பஞ்சாபின் தரம்கோட்டைச் சேர்ந்த மோகா தொகுதி எம்.எல்.ஏ தேவேந்திரஜித் சிங், ஆம் ஆத்மி அரசு தனது தொகுதியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில், எனது சட்டமன்றத் தொகுதியில் சுகாதாரம் தொடர்பான எந்தத் திட்டமும் வழங்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
”தரம்கோட் தொகுதியை ஏன் இப்படி பாரபட்சத்துடன் பார்க்கிறார்கள்? தரம்கோட் பஞ்சாபின் ஒரு பகுதி இல்லையா? நாங்கள் பாகிஸ்தானில் வசிப்பது போல் தெரிகிறது” என சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அவர் இப்படித் தெரிவித்தார்.
அவர் இப்படி பேசியதற்கு காரணம், முன்னதாக, சுகாதார அமைச்சர் டாக்டர் பல்பீர் சிங், ”தரம்கோட் ஆரம்ப சுகாதார மையத்தை துணைப்பிரிவு மருத்துவமனையாக மேம்படுத்தும் எந்த திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை. எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோட் இசே கான் சமூக சுகாதார மையத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையம் வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கனவே ஐந்து அதிர்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஜலந்தர், பதான்கோட், கன்னா, ஃபெரோஸ்பூர் மற்றும் ஃபாசில்கா ஆகிய இடங்களில் உள்ளன” என அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த அறிக்கை அதிருப்தி அடைந்த தரம்கோட் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ,தேவேந்திரஜித் சிங் ”தரம்கோட் தொகுதி ஒரு பின்தங்கிய பகுதி. நாங்களும் பஞ்சாபில் வசிப்பவர்கள். எங்கள் மாவட்டம் மோகா. எங்கள் அரசு எங்கள் சட்டமன்றத் தொகுதிக்கு சுகாதாரம் தொடர்பான ஒரு திட்டத்தைக் கூட வழங்கவில்லை. கோட் இசே கான் சமூக சுகாதார மையத்தில் எட்டு எம்பிபிஎஸ் மருத்துவர் பணியிடங்களில் இரண்டு மட்டுமே இதுவரை நிரப்பப்பட்டுள்ளன. தரம்கோட் மாற்றாந்தாய் முறையில் நடத்தப்படுகிறது.
முன்னதாக 300 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டதாகவும், அதில் நான்கு மருத்துவர்கள் மட்டுமே மோகாவிற்கு வழங்கப்பட்டது. அவர் கூறினார். இப்போது 255 எம்பிபிஎஸ் மருத்துவர்களில், நான்கு பேர் மட்டுமே மோகாவுக்கு வழங்கப்படுகிறார்கள். மலேர்கோட்லா ஒரு சிறிய மாவட்டம், மோகாவுக்கு நான்கு மருத்துவர்கள் வழங்கப்பட்ட நிலையில், அங்கு 28 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தரம்கோட்க்கு ஏன் இப்படி ஒரு சிகிச்சை அளிக்கப்பட்டது என்று நான் கேட்க விரும்புகிறேன் என்று தேவேந்திரஜித் சிங் கூறினார். இது பஞ்சாபின் ஒரு பகுதி இல்லையா? நாங்கள் பாகிஸ்தானில் வசிப்பது போல் தெரிகிறது எனத் தெரிவித்தார்.
தேவேந்திரஜித் சிங் தரம்கோட் சட்டமன்றத்தின் எம்.எல்.ஏ. அவர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர். 2022 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.காங்கிரசின் சுக்ஜீத் சிங் காகாவை தோற்கடித்தார். இந்தத் தேர்தலில் தேவேந்திரஜித் சிங் 65 ஆயிரத்து 378 வாக்குகளைப் பெற்றார். அதே நேரத்தில் சுக்ஜீத் சிங் 35 ஆயிரத்து 406 வாக்குகளைப் பெற்றார்.