Homeசெய்திகள்அரசியல்மோடியின் முதல் கையொழுத்து - விவசாயிகளுக்கான நிதி

மோடியின் முதல் கையொழுத்து – விவசாயிகளுக்கான நிதி

-

- Advertisement -

விவசாயிகள் நிவாரண நிதிக்கான ரூ.20,000 கோடியை விடுவித்து பிரதமர் மோடி முதல் கையெழுத்திட்டார்.

மோடியின் முதல் கையொழுத்து - விவசாயிகளுக்கான நிதி

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து 3வது முறையாக ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ளது.

பிரதமராக மோடி உள்ளிட்ட 72 அமைச்சர்கள் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, முறைப்படி பிரதமராக மோடி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 3வது முறை பிரதமரானதும் விவசாயிகளுக்காக மோடி தனது முதல் கையெழுத்திட்டார்.

மோடியின் முதல் கையொழுத்து - விவசாயிகளுக்கான நிதி

நாடு முழுவதும் பிஎம் கிசான் (PM-KISAN) நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.6,000 நிதி தங்கள் வங்கிக் கணக்குகளில் ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் 3 சமமான தவணைகளாக ₹2,000 வழங்கப்பட்டு வருகிறது.

மோடி அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன இலாகாக்கள்? (apcnewstamil.com)

இத்திட்டத்தின் 17வது தவணையாக விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 நிதி வழங்குவதற்காக ரூ.20,000 கோடியை விடுவித்து மோடி கையெழுத்திட்டார். இதன் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். இந்த நிதி அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ